Home
Mobile

இதுதாங்க டிஸ்கவுண்ட்.. அடிமட்ட ரேட்ல QUAD கேமரா.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 18W சார்ஜிங்.. எந்த மாடல்?

ரூ.15,000 பட்ஜெட் எதுக்கு? ரூ.12,000 போதும் குவாட் பிக்சல் டெக்னாலஜி கொண்ட 50 எம்பி கேமரா, கார்னிங் கொரில்லா கிளாஸ் புரொடெக்சன் கொண்ட ஐபிஎஸ் டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 14 ஓஸ் கொண்ட ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 3 சிப்செட், 18W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh போன்ற நம்ப முடியாத பீச்சர்கள் மட்டுமல்லாமல், வேகன் லெதர் பேக் பேனல் டிசைனில் பிரீமியம் லுக்குடன் மோட்டோ ஜி45 5ஜி (Moto G45 5G) ஆர்டருக்கு கிடைக்கிறது. பிளிப்கார்ட் தளத்தில் டிஸ்கவுண்ட் போக அடிமட்ட விலைக்கு வருகிறது.

இந்த மோட்டோ ஜி45 5ஜி போனானது, பட்ஜெட்டிலும் வரவேற்கும்படியான ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் மற்றும் 8 ஜிபி விரச்சுவல் ரேம் பீச்சர்களை கொடுக்கிறது. அதேபோல குவாட் பிக்சல் டெக்னாலஜி (Quad Pixel Technology) கேமராவை பேக் செய்கிறது. டிஸ்பிளேவில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) பாதுகாப்பை கொடுக்கிறது.

இதுதாங்க டிஸ்கவுண்ட்.. அடிமட்ட ரேட்ல QUAD கேமரா.. 1TB மெமரி.. மாடல்?

மோட்டோ ஜி45 5ஜி அம்சங்கள் (Moto G45 5G Specifications): 8.03 மிமீ ஸ்லிம் பாடியில் வேகன் லெதர் பேக்குடன் பிரீமியம் லுக் கொடுக்கிறது. ஆகவே, ரூ.12,000 பட்ஜெட்டில் வேகன் லெதர் பேக் பேனலுடன் விவா மெஜெந்தா (Viva Magenta), பிரில்லியன்ட் ப்ளூ (Brilliant Blue) மற்றும் பிரில்லியன்ட் கிரீன் (Brilliant Green) கலர்களில் ஆர்டருக்கு வருகிறது.

கேமராவை பொறுத்தவரையில் பிடிஏஎப் (PDAF) போகஸ் மற்றும் குவாட் பிக்சல் டெக்னாலஜி கொண்ட 50 எம்பி மெயின் கேமரா மற்றும் பிக்சட் போகஸ் (Fixed Focus) கொண்ட 2 எம்பி மேக்ரோ கேமரா கிடைக்கிறது. மெயின் கேமராவில் 8எக்ஸ் டிஜிட்டல் ஜூமிங் (Digital Zooming) மற்றும் ஃபுல்எச்டி (FHD) வீடியோ ஷூட்டிங் சப்போர்ட் வருகிறது.

இந்த கேமராவில் டூயல் கேப்ச்சர் வீடியோ (Dual Capture Video), ஸ்பாட் கலர் வீடியோ (Spot Color Video) மற்றும் வீடியோ ஸ்டெபிலைசேஷன் (Video Stabilization) போன்ற வீடியோகிராபி பீச்சர்கள் கிடைக்கின்றன. போட்டோகிராபி பீச்சர்களை பார்க்கையில், நைட் விஷன் (Night Vision), மேக்ரோ விஷன் (Macro Vision), ஆட்டோ எச்டிஆர் (Auto HDR) கிடைக்கிறது.

மேலும், ஆட்டோ ஸ்மைல் (Auto Smile), ஷாட் ஆப்டிமைசேஷன் (Shot Optimization) பீச்சர்களும் வருகின்றன. இந்த மோட்டோ ஜி வெர்ஷனில் 16 எம்பி ஃப்ரன்ட் கேமரா பேக் செய்யப்பட்டுள்ளது. எச்டிபிளஸ் (HD+) ரெசொலூசன் மற்றும் ஆக்டிவ் ஏரியா டச் பேனல் கொண்ட 6.5 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) ஐபிஎஸ் எல்சிடி (IPS LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உள்ளது.

மேலும், 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 269 பிபிஐ பிக்சல் டென்சிட்டி வருகிறது. முன்பே சொன்னதை போல கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பை கொடுத்து இருக்கிறது. இந்த மோட்டோ ஜி45 5ஜி போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த வேரியண்ட்டில் 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் + 1 டிபி மெமரி சிலாட் உள்ளது.

ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மட்டுமல்லாமல் மோட்டோ நிறுவனத்தின் மை யுஎக்ஸ் (My UX) கொண்ட ஆக்டா கோர் 6என்எம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 3 எஸ்ஓசி (Octa Core 6nm Qualcomm Snapdragon 6s Gen 3 SoC) சிப்செட் மற்றும் அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டை கொடுக்கிறது. இந்த மோட்டோவுக்கு IP52 ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது.

5000mAh பேட்டரி மற்றும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் பெற்று கொள்ளலாம். இந்த மோட்டோ ஜி45 5ஜி போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.12,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இப்போது ரூ.1000 உடனடி டிஸ்கவுண்ட் போக பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் ஆர்டருக்கு கிடைக்கிறது. ஆகவே, ரூ.11,999 பட்ஜெட்டில் வருகிறது. பட்ஜெட்டுக்கு ஏற்ற மோட்டோ மாடலாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Moto G45 5G With 50MP Camera 8GB RAM Sale Under Rs 12000 in Flipkart Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X