மார்கெட் காலி.. பட்ஜெட்ல 50MP கேமரா.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 18W சார்ஜிங்.. 16GB ரேம்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் பட்டையை கிளப்பும் பீச்சர்களுடன் கம்மியான பட்ஜெட்டில் மோட்டோ ஜி45 5ஜி (Moto G45 5G) விற்பனைக்கு வர இருக்கிறது. நம்ப முடியாத விலையில் லெதர் பேனல் மட்டுமல்லாமல், 1 டிபி மெமரி, 16 ஜிபி ரேம், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்பிளே, குவாட் பிக்சல் டெக்னாலஜி கேமரா, 18W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற பீச்சர்களை இந்த மோட்டோ பேக் செய்கிறது. இந்த போனின் வெளியீட்டு தேதி மற்றும் முழு பீச்சர்கள் இதோ.
மோட்டோ ஜி45 5ஜி அம்சங்கள் (Moto G45 5G Specifications): இந்த மோட்டோவில் 6.5 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) ஐபிஎஸ் எல்சிடி (IPS LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 269 பிபிஐ பிக்சல் டென்சிட்டி வருகிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. 8 ஜிபி ரேம் (4 ஜிபி ரேம் + 4 ஜிபி ரேம் பூஸ்ட்) + 128 ஜிபி மெமரி வருகிறது.

அதேபோல 16 ஜிபி ரேம் (8 ஜிபி ரேம் + 8 ஜிபி ரேம் பூஸ்ட்) + 128 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன. இந்த மோட்டோவில் 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) சப்போர்ட் வருகிறது. 1 வருட ஓஎஸ் அப்டேட் மற்றும் 3 வருட செக்யூரிட்டி அப்டேட் உடன் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) வருகிறது.
இந்த மோட்டோ ஜி45 5ஜி போனில் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 3 6என்எம் (Octa-core Qualcomm Snapdragon 6s Gen 3 6nm) சிப்செட் வருகிறது. சைடு ஃபிங்கர்பிரிண்ட் ரீடர் (Side Fingerprint Reader), பேஸ் அன்லாக் (Face Unlock) சப்போர்ட் வருகிறது. கம்மி பட்ஜெட்டிலும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது.
50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி மேக்ரோ கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. மெயின் கேமராவில் பிடிஏஎப் (PDAF) மற்றும் குவாட் பிக்சல் டெக்னாலஜி (Quad Pixel Technology) வருகிறது. மேக்ரோ கேமராவில் பிக்சட் போகஸ் (Fixed Focus) சப்போர்ட் வருகிறது. இந்த மோட்டோவில் 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது.
ஃபுல்எச்டிபிளஸ் வீடியோ ஷூட் சப்போர்ட் உள்ளது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), 3.5 எம்எம் ஹெட்செட் ஜாக் (Headset Jack), 2 மைக்ரோபோன்கள் மற்றும் டைப்-சி போர்ட் (Type-C Port) வருகின்றன. IP52 வாட்டர் புரொடெக்சன் வருகிறது. பேட்டரி உடன் 183 கிராம் எடை மற்றும் 8.03 எம்எம் தடிமன் மட்டுமே வருகிறது.
இந்த அம்சங்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கின்றன. அதேபோல பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் விற்பனைக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி இந்திய மார்கெட்டில் களமிறங்க இருக்கிறது. ஆனால், விலை விவரங்கள் வெளியாகவில்லை. இருப்பினும், ரூ.15,000 பட்ஜெட்டுக்குள் வெளியாக வாய்ப்புள்ளது.
இந்த மோட்டோவை பிரில்லியன்ட் ப்ளூ (Brilliant Blue), விவா மெஜந்தா (Viva Magenta) மற்றும் பிரில்லியன்ட் க்ரீன் (Brilliant Green) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். மூன்று மாடல்களிலும் லெதர் பேக் பேனல் வருகிறது. ஆகவே, பிரீமியம் லுக் கொடுக்கும் மாடல்களில் இந்த மோட்டோ ஜி45 5ஜி போனும் இடம் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications








