Home
Mobile

யாரு சாமி அவன்.. ரூ.9999 போதும்.. 50MP கேமரா.. IPS டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி.. 18W சார்ஜிங்.. எந்த மாடல்?

இந்திய மார்கெட் அதிரும் பட்ஜெட்டில் வேகன் லெதர் பேக் பேனல் மட்டுமல்லாமல், குவாட் பிக்சல் டெக்னாலஜி கொண்ட 50 எம்பி மெயின் கேமரா, எச்டிபிளஸ் ரெசொலூஷன் கொண்ட ஐபிஎஸ் டிஸ்பிளே, 18W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி மற்றும் செக்மெண்ட்டில் முதல் முறையாக ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 3 5ஜி சிப்செட்டுடன் மோட்டோ ஜி45 5ஜி (Moto G45 5G) களமிறங்கி இருக்கிறது. இந்த மோட்டோவின் விலை, விற்பனை மற்றும் பீச்சர்கள் குறித்த விவரம் இதோ.

மோட்டோ ஜி45 5ஜி அம்சங்கள் (Moto G45 5G Specifications): இந்த மோட்டோ போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு மை யுஎக்ஸ் (My UX) கொண்ட ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 3 5ஜி எஸ்ஓசி (Octa Core Qualcomm Snapdragon 6s Gen 3 6nm 5G SoC) சிப்செட் வருகிறது.

யாரு சாமி அவன்.. ரூ.9999 போதும்.. 50MP கேமரா.. IPS டிஸ்பிளே மாடல்!

இந்த பட்ஜெட்டில் அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டை பேக் செய்துள்ளது. 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் ஆர்டருக்கு வர இருக்கிறது. 8 ஜிபிக்கான ரேம் பூஸ்டர் (RAM Booster) மற்றும் 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) சிலாட் வருகிறது.

இந்த மோட்டோ ஜி45 5ஜி போனில் 6.5 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) ஐபிஎஸ் (IPS) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. மேலும், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) புரொடெக்சன் உள்ளது.

ஹைபிரிட் டூயல் சிம் (Hybrid Dual SIM) மற்றும் மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) வருகிறது. மேலும், 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டைப்-சி சார்ஜிங் போர்ட் (Type-C Charging Port) வருகிறது. இந்த மோட்டோவில் IP52 ஃஸ்ளாஷ் ரெசிஸ்டன்ட் வருகிறது.

யாரு சாமி அவன்.. ரூ.9999 போதும்.. 50MP கேமரா.. IPS டிஸ்பிளே மாடல்!

50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா கொண்ட டூயல் ரியர் செட்டப் (Dual Rear Setup) வருகிறது. 16 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. இந்த மெயின் கேமராவில் குவால் பிக்சல் டெக்னாலஜி (Quad Pixel Technology) உள்ளது. பட்ஜெட்டிலும், டால்பி அட்மோஸ் (Dolby Atmos) உள்ளது.

மேலும், ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) சப்போர்ட் வருகிறது. இந்த மோட்டோ ஜி45 5ஜி போனில் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) வருகிறது. 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. பேட்டரி உடன் 8.03 எம்எம் தடிமன் உள்ளது.

அதேபோல 183 கிராம் எடை கொண்டிருக்கிறது. வேகன் லெதர் பேக் பேனல் டிசைனில் பிரில்லியன்ட் ப்ளூ (Brilliant Blue), பிரில்லியன்ட் கிரீன் (Brilliant Green) மற்றும் விவா மெஜந்தா (Viva Magenta) கலர்களில் ஆர்டருக்கு கிடைக்க இருக்கிறது. 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.10,999ஆக இருக்கிறது.

அதேபோல 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.12,999ஆக இருக்கிறது. ஆக்சிஸ் பேங்க் மற்றும் ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் பேங்க் கிரெடிட் கார்டுக்கு ரூ.1000 உடனடி டிஸ்கவுண்ட் கொடுக்கப்பட இருக்கிறது. ஆகவே, ரூ.9999 பட்ஜெட்டில் வாங்கலாம். ஆகஸ்ட் 28ஆம் தேதி பிளிப்கார்ட் தளத்தில் விற்பனை தொடங்குகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Moto G45 5G With 4GB RAM Launched Under Rs 10000 Sale From August 28 Flipkart Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X