ரூ.13,000 க்கும் கம்மியான விலை.. ஆனா 13 5G பேண்டுகள், 50MP Quad Pixel கேமரா.. Moto G45 5G சும்மா மிரட்டுது!
மோட்டோரோலா (Motorola) நிறுவனத்தின் புதிய பட்ஜெட்-விலை ஸ்மார்ட்போனாக மோட்டோ ஜி45 5ஜி (Moto G45 5G) மாடல் வருகிற ஆகஸ்ட் 21 ஆம் தேதி அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மோட்டோ ஜி64 5ஜி (Moto G64 5G) மாடலை விட குறைவாக இருக்கும் என்பது போல் தெரிகிறது. நினைவூட்டும் வண்ணம் மோட்டோ ஜி64 5ஜி ஆனது ரூ.13,999 க்கு வாங்க கிடைக்கிறது. ஆக எப்படி பார்த்தாலும் மோட்டோ ஜி45 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயமானது ரூ.13,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் தான் இருக்கும்!
அறிமுகத்திற்கு பின்னர் மோட்டோ ஜி45 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது பிளிப்கார்ட் (Flipkart) வழியாக வாங்க கிடைக்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக மோட்டோ ஜி45 5ஜி ஸ்மார்ட்போனின் லேண்டிங் பேஜும் பிளிப்கார்ட்டில் லைவ் ஆகியுள்ளது. அதன் வழியாக மோட்டோ ஜி45 5ஜி ஸ்மார்ட்போனை வாங்குவதற்கான முக்கிய காரணங்கள் பகிரப்பட்டுள்ளாது. அதென்ன காரணங்கள்? இதோ விவரங்கள்:

1. அல்ட்ரா பிரீமியம் டிசைன்: மோட்டோரோலாவின் கூற்றுப்படி, மோட்டோ ஜி 45 அதன் அல்ட்ரா பிரீமியம் வடிவமைப்புடன் தனித்து நிற்கிறது. இது பச்சை, சிவப்பு மற்றும் நீலம் போன்ற மூன்று துடிப்பான வண்ணங்களில் அறிமுகம் செய்யப்படும். பின்புறத்தில் உள்ள வேகன் ஸ்கின் பினிஷ் ஆனது இந்த ஸ்மார்ட்போனை இன்னும் ஸ்டைலானதாக காட்டும்.
2. பவர் பேக்டு ப்ராசஸர்: மோட்டோ ஜி45 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 3 (Snapdragon 6s Gen 3) சிப்செட்டால் இயக்கப்படுகிறது. அதாவது இது ஒரு பட்ஜெட் விலை 5ஜி ஸ்மார்ட்போனாக இருந்தாலும் கூட 5ஜி திறன்களை கொண்டுவருகிறது. இந்தியாவில் ரூ.17,999 க்கு வாங்க கிடைக்கும் மோட்டோ ஜி85 ரஜி ஸ்மார்ட்போனில் அதே சிப்செட்டை பேக் செய்கிறது.
3. 13 5ஜி பேண்டுகளுடன் கூடிய அதிவேகமான 5ஜி நெட்வொர்க்: மோட்டோ ஜி45 5ஜி ஸ்மார்ட்போன் ஆனத 13 5G பேண்டுகளுக்ளுக்கான ஆதரவுடன் வருகிறது. அதாவது நீங்கள் எங்கு சென்றாலும் தடையற்ற ப்ரவுஸிங், ஸ்ட்ரீமிங் மற்றும் டவுன்லோடிங் ஸ்பீட்டை அனுபவிக்க அனுமதிக்கும்; வேகமான 5ஜி கனெக்டிவிட்டியையும் உறுதியளிக்கும்.
4. விஷூவல் ட்ரீட் கொடுக்கும் 6.5-இன்ச் 120ஹெர்ட்ஸ் டிஸ்பிளே: மோட்டோ ஜி45 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் கொரில்லா கிளாஸ் 3 ப்ரொடெக்ஷன் உடனான ஒரு அற்புதமான டிஸ்பிளே அனுபவத்தை வழங்கும். கூடவே டால்பி அட்மோஸ் மற்றும் ஹை-ரெஸ் ஆடியோவையும் கொண்டுள்ளது. இதெல்லாம் சேர்ந்து அதிவேக மல்டிமீடியா அனுபவத்தை வழங்கும்.
5. இன்டெலிஜென்ட் ஆன 50எம்பி குவாட் பிக்சல் கேமரா: மோட்டோ ஜி45 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 50எம்பி குவாட்-பிக்சல் ப்ரைமரி கேமராவை கொண்டுள்ளது. இது எந்த லைட்டிங் நிலையிலும் ஈர்க்கக்கூடிய காட்சிகளை கைப்பற்ற உறுதியளிக்கிறது. மேலும் இதன் கேமரா செட்டப்பில் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் மற்றும் 16 மெகாபிக்சல் செல்பீ கேமராவும் உள்ளது.
6. ஸ்மார்ட் கனெக்ட் அம்சங்கள்: மோட்டோ ஜி45 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஸ்மார்ட் கனெக்ட் அம்சங்களுடன் வருகிறது, இது உங்கள் லேப்டாப் போன்ற பிற டிவைஸ்களுடன் தடையற்ற ஒருங்கிணைப்பை அனுமதிக்கிறது, இதன் மூலம் உங்கள் உற்பத்தித்திறன் மற்றும் கனெக்டிவிட்டியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியும்.
7. போதுமான ரேம் மற்றும் ஸ்டோரேஜ்: மென்மையான செயல்திறனுக்காக மோட்டோ ஜி45 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 8 ஜிபி ரேம் உடன் வருகிறது. கூடுதலாக, இது 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜையும் வழங்கும். மோட்டோ ஜி45 5ஜி ஆனது LPDDR4x ரேம் மற்றும் UFS 2.2 ஸ்டோரேஜை கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக, அதிக ஸ்டோரேஜிர்காக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டையும் (ஹைப்ரிட் சிம் ஸ்லாட் வழியாக) கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








