ஆகஸ்ட் 21 உறுதி.. 50எம்பி கேமரா.. எல்சிடி டிஸ்பிளே.. இந்தியாவுக்கு வரும் புது Moto 5ஜி போன்.. எந்த மாடல்?
மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது மோட்டோ ஜி45 5ஜி (Moto G45 5G) எனும் போனை வரும் ஆகஸ்ட் 21-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது மோட்டோரோலா நிறுவனம். குறிப்பாக தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும். மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் விவரக்குறிப்புகளை இந்த பதிவில் பார்க்கலாம்.
மோட்டோ ஜி45 5ஜி அம்சங்கள் (Moto G45 5G specifications): சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 3(Snapdragon 6s Gen 3 SoC) சிப்செட் வசதியுடன் இந்த மோட்டோ ஜி45 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவுக்கு வரும். அதேபோல் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மூலம் இந்த போன் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட் கிடைக்கும்.

6.5-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளேவைக் கொண்டு இந்த மோட்டோ ஜி45 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும். பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 900 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் மோட்டோ ஜி45 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
மோட்டோ ஜி45 5ஜி ஸ்மார்ட்போன் 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி மேக்ரோ லென்ஸ் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.
குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொண்ட ஸ்பீக்கர்கள் (Speaker) கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் சைடு பேஸிங் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Facing Fingerprint Sensor) கொண்டுள்ளது இந்த மோட்டோ ஸ்மார்ட்போன். அதேபோல் பிங்க், ப்ளூ, கிரீன் ஆகிய நிறங்களில் இந்த போன் விற்பனைக்கு வரும்.

18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000எம்ஏஎச் பேட்டரி வசதி இந்த மோட்டோ ஜி45 5ஜ ஸ்மார்ட்போனில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கொடுக்கும். அதேபோல் 5ஜி,3.5 மிமீ இயர்போன் ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட், புளூடூத் 5.3, வை-பை 802, ஜிபிஎஸ், உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன.
அதேபோல் மோட்டோ ஜி45 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் ரூ.12,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த போன் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. குறிப்பாக பிளிப்கார்ட் தளத்தில் இந்த போன் விற்பனைக்கு வரும்.


Click it and Unblock the Notifications








