Home
Mobile

பய புடிச்சிட்டான்.. ரூ.9999 விலைக்கு 5G Mobile-ஆ? நம்பமுடியல.. அடிச்சு புடிச்சு ஆர்டர் போடுறாங்க.. எந்த மாடல்?

மோட்டோரோலா (Motorola) நிறுவனம் இந்திய சந்தையில் அதன் புதிய மலிவு விலை 5G ஸ்மார்ட்போன் சாதனமான மோட்டோ G45 5ஜி (Moto G45 5G) சாதனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சாதனம், இப்போது விற்பனைக்கு வாங்க கிடைக்கிறது. இந்தியாவில் ரூ. 9,999 விலையில் புதிதாக 5ஜி போன் வாங்க வேண்டுமென்றால், இனி இந்த மோட்டோ G45 5ஜி (Moto G45 5G) சாதனம் தான் டாப் தேர்வாக இருக்க போகிறது. அப்படி இந்த போனில் என்னவெல்லாம் இருக்கிறதென்று பார்க்கலாம்.

மோட்டோ G45 5G பிரில்லியன்ட் ப்ளூ, பிரில்லியன்ட் கிரீன் மற்றும் விவா மெஜென்டா வண்ணங்களில் வாங்க கிடைக்கிறது. இது வீகன் லெதர் பின்புறத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் 4GB + 128GB மாடலுடன் ரூ.10,999 விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இதில் 8GB + 128GB வேரியண்ட் மாடலும் உள்ளது. இது ரூ.12,999 விலையில் வருகிறது. இதை ஃப்ளிப்கார்ட், motorola.in மற்றும் சில்லறை கடைகளிலிருந்து வாங்கலாம்.

பய புடிச்சிட்டான்.. ரூ.9999 விலைக்கு 5G Mobile-ஆ? நம்பமுடியல..

மோட்டோ G45 5ஜி (Moto G45 5G):

மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ G45 5G ஸ்மார்ட்போன் சாதனத்தை 6.5' இன்ச் HD+ IPS டிஸ்ப்ளேவை 1600 x 720 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் 20:9 விகிதத்துடன் வழங்கியுள்ளது. இது 120Hz ரெஃப்ரஷ் ரேட் விகிதத்தை ஆதரிக்கிறது. இது 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உடன் கார்னிங் கோரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் பாதுகாக்கப்படுகிறது.

இந்த டிவைஸ் ஆக்ட்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6s Gen 3 சிப்செட் (Snapdragon 6s Gen 3 SoC) உடன் இயக்கப்படுகிறது. இதில் 2.30 GHz இல் இயங்கும் இரண்டு Cortex-A78 கோர்கள் மற்றும் 2.0 GHz இல் இயங்கும் ஆறு Cortex-A55 கோர்கள் உள்ளன. இவை 900MHz வரை இயங்கும் ஒரு Adreno 619 GPU உடன் இணைக்கப்பட்டுள்ளன. இதன் கேமரா அம்சம் பற்றி பேசுகையில் இது டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.

இதில் 50MP சென்சார் மற்றும் 2MP மேக்ரோ லென்ஸ் இடம்பெற்றுள்ளது. முன்பக்கத்தில் இது 16MP செல்பி கேமராவை கொண்டுள்ளது. இதில் டால்பி அட்மாஸ் ஆதரவு மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ சான்றிதழ் ஆகியவற்றைக் கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இடம்பெற்றுள்ளன. கூடுதலாக, இது பாதுகாப்புக்காக பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனரை உள்ளடக்கியது. மோட்டோ G45 5G டூயல் 4ஜி VOLTE உடன் வருகிறது.

இதன் 5ஜி பற்றி பேசுகையில், இது (n1/n3/n5/n7/n8/n20/n28/n38/n40/n41/n77/n78) இன் பல்வேறு 5ஜி பேண்டுகளை வழங்குகிறது. இது ப்ளூடூத் வெர்ஷன் 5.2, GPS மற்றும் USB Type-C போர்ட் உள்ளிட்ட பல இணைப்பு விருப்பங்களை ஆதரிக்கிறது. இது 5000mAh பேட்டரி உடன் 18W வரை பாஸ்ட் சார்ஜ் செய்வதை ஆதரிக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் மீது இப்போது ரூ. 1000 முதல் ரூ. 5000 வரையிலான சலுகை மற்றும் கூடுதல் நன்மைகள் கிடைக்கிறது.

மோட்டோ G45 5ஜி மீது சலுகை (Moto G45 5G Offers):

அக்ஸிஸ் வங்கி அல்லது IDFC First வங்கி கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் EMI பரிவர்த்தனைகள் மூலம் தங்கள் கொள்முதலில் ரூ. 1000 தள்ளுபடியைப் பெறலாம். ஜியோ பயனர்கள் ரூ. 5000 மதிப்புள்ள சலுகைகளையும் பெறுகிறார்கள். இதில் பலதரப்பட்ட நன்மைகளை நீங்கள் அனுபவிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Moto G45 5G Budget Mobile Goes On Sale In India Price Rs 9999 With Additional Offers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X