ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் உடன் மோட்டோ ஜி42 ஸ்மார்ட்போன் அறிமுகம்., நம்பி வாங்கலாம்!
மோட்டோரோலா நிறுவனம் புதிய மோட்டோ ஜி42 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் வரும் நாட்களில் பிரேசிலில் விற்பனைக்கு வரும் என்றும், அதன்பின்பு இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளிலும் விற்பனைக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

தனித்துவமான டிஸ்பிளே
மோட்டோ ஜி42 ஸ்மார்ட்போன் ஆனது 6.4-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. குறிப்பாக ஒரு சில போன்களில் மட்டுமே இந்த டிஸ்பிளே வசதி உள்ளது.சுருக்கமாக கூறவேண்டும் என்றால் சிறந்த திரை அனுபவம் கொடுக்கும் இந்த ஸ்மார்ட்போன். மேலும் 1080 x 2400பிக்சல் தீர்மானம், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தரமான ஆடியோ வசதி
மோட்டோ ஜி42 ஸ்மார்ட்போனில் Dolby Atmos ஆதரவுடன் இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர் வசதிகள் உள்ளன. குறிப்பாக இது சிறந்த ஆடியோ அனுபவத்தை கொடுக்கும். மேலும் நமது கண்களை பாதுகாக்க ஒரு சிறப்பான வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

சூப்பர் சிப்செட்
இந்த மோட்டோ ஜி42 ஸ்மார்ட்போனில் அருமையான சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது என்றுதான் கூறவேண்டும். அதாவது குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான மோட்டோ ஸ்மார்ட்போன். குறிப்பாக இதன் செயல்திறன் மிக அருமையாகஇருக்கும். எனவே இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்.

ஆண்ட்ராய்டு இயங்குதளம்
My UX சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த மோட்டோ ஜி42 ஸ்மார்ட்போன். அதேபோல் 4ஜிபி ரேம், 128ஜிபி உள்ளடக்க மெமரி, மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உட்பட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அட்டகாசமான கேமரா வசதி
மோட்டோ ஜி42 ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி கேமரா+ 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் மூன்று கேமரா பொருத்தப்பட்டுள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதியஸ்மார்ட்போன். எனவே அட்டகாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

பேட்டரி வசதி
இந்த மோட்டோ ஜி42 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. எனவே நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 20 வாட் டர்போபவர் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு,கைரேகை சென்சார் வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

மோட்டோ ஜி42 எடை
டூயல் சிம் ஸ்லாட், வைஃபை 802.11ஏசி, புளூடூத் 5.0, என்எப்சி, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல இணைப்பு
ஆதரவுகளுடன் இந்த புதிய மோட்டோ ஜி42 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதேபோல் நீலம் மற்றும் ரோஸ் நிறங்களில் இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு இந்த சாதனத்தின் விலைப் பற்றிய தகவலை வெளியிடவில்லை அந்நிறுவனம். குறிப்பாக இந்த சாதனத்தின்எடை 174.5 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications