விரைவில் இந்தியாவில் களமிறங்கும் அசத்தலான Moto G42.! விலை மற்றும் அம்சங்கள்?

|

மோட்டோரோலா நிறுவனம் இந்த மாதம் துவக்கத்தில் மோட்டோ ஜி42 (Moto G42) போனை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. இந்நிலையில் மோட்டோ ஜி42 போன் விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளிவந்துள்ளது.

 ஜூலை 4-ம் தேதி?

ஜூலை 4-ம் தேதி?

இணையத்தில் கசிந்த தகவலின்படி, இந்த புதிய மோட்டோ ஜி42 ஸ்மாரட்போன் வரும் ஜூலை 4-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று
கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

Nothing Phone 1 இந்தியாவில் Reliance டிஜிட்டல் வழியாக விற்பனையா? இது சீன போனா? உண்மை இதோ!Nothing Phone 1 இந்தியாவில் Reliance டிஜிட்டல் வழியாக விற்பனையா? இது சீன போனா? உண்மை இதோ!

மோட்டோ ஜி42-டிஸ்பிளே

மோட்டோ ஜி42-டிஸ்பிளே

இந்த மோட்டோ ஜி42 ஸ்மார்ட்போன் ஆனது 6.4-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 x 2400 பிக்சல் தீர்மானம், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 20:9 ரேஷியோ மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால்அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

இந்தியாவில் டைனோசர் முட்டை! 2050 இல் டைனோசர் மீண்டும் உயிர் பெறுமா? என்னப்பா சொல்றீங்க?இந்தியாவில் டைனோசர் முட்டை! 2050 இல் டைனோசர் மீண்டும் உயிர் பெறுமா? என்னப்பா சொல்றீங்க?

டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்

டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் மோட்டோ ஜி42 ஸ்மார்ட்போனில் Dolby Atmos ஆதரவுடன் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர் வசதிகள் உள்ளன. எனவே இது தரமான ஆடியோ அனுபவத்தை கொடுக்கும். மேலும் நமது கண்களை பாதுகாக்க Night Mode வசதியுடன் இந்தஸ்மார்ட்போன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

என்னா மனுஷன்யா? சின்ன டுவிஸ்ட் உடன் மிக மலிவு விலை பிளான்: இன்பதிர்ச்சி கொடுத்த Netflix CEOஎன்னா மனுஷன்யா? சின்ன டுவிஸ்ட் உடன் மிக மலிவு விலை பிளான்: இன்பதிர்ச்சி கொடுத்த Netflix CEO

ஸ்னாப்டிராகன் 680 சிப்செட்

ஸ்னாப்டிராகன் 680 சிப்செட்

மோட்டோ ஜி42 போனில் தரமான சிப்செட் வசதி உள்ளது என்றே கூறலாம். அதாவது இந்த புதிய போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் வசதியைக் கொண்டு வெளிவரும். எனவே இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் இந்த மோட்டோ ஸ்மார்ட்போன். மேலும் My UX சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி42 ஸ்மார்ட்போன்.

128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

புதிய மோட்டோ ஜி42 ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம், 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் உள்ளன. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது மோட்டோரோலா நிறுவனம். அதேபோல் இந்த போன் அட்ரினோ 610 ஜிபியு ஆதரவையும் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

BSNL வாரி வழங்கும் '600ஜிபி டேட்டா' ப்ரீபெய்ட் திட்டம்.. விலை இவ்வளவு தான் ஆனா நன்மை ஏராளம்BSNL வாரி வழங்கும் '600ஜிபி டேட்டா' ப்ரீபெய்ட் திட்டம்.. விலை இவ்வளவு தான் ஆனா நன்மை ஏராளம்

ட்ரிபிள் ரியர் கேமரா

ட்ரிபிள் ரியர் கேமரா

மோட்டோ ஜி42 ஸ்மார்ட்போன் ஆனது 50எம்பி பிரைமரி கேமரா+ 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா+2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்களை எடுக்க முடியும்.

ஆப்பிள் இலவசமாக AirPods வழங்கும் Back to School ஆஃபர்.. என்ன செய்தால் 'இது' இலவசமாக கிடைக்கும்?ஆப்பிள் இலவசமாக AirPods வழங்கும் Back to School ஆஃபர்.. என்ன செய்தால் 'இது' இலவசமாக கிடைக்கும்?

நீலம் மற்றும் ரோஸ்

நீலம் மற்றும் ரோஸ்

அதேபோல் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா ஆதரவுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக நீலம் மற்றும் ரோஸ் நிறங்களில் இந்த புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும்.

53 உயர்நிதிமன்ற நீதிபதிக்கு iPhone 13 Pro வாங்க புது டெண்டர்.. ஏன் ஐபோன் 13 செலக்ட் செஞ்சாங்க தெரியுமா?53 உயர்நிதிமன்ற நீதிபதிக்கு iPhone 13 Pro வாங்க புது டெண்டர்.. ஏன் ஐபோன் 13 செலக்ட் செஞ்சாங்க தெரியுமா?

டர்போபவர் பாஸ்ட் சார்ஜிங்

டர்போபவர் பாஸ்ட் சார்ஜிங்

மோட்டோ ஜி42 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. எனவே நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 20 வாட் டர்போபவர் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் போன்ற பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய மோட்டோ ஸ்மார்ட்போன்.

ரூ.15,000-க்கு கீழ் அறிமுகமாகும்

டூயல் சிம் ஸ்லாட், வைஃபை 802.11ஏசிஇ புளூடூத் 5.0, என்எப்சி, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும்இந்த மோட்டோ ஜி42 ஸ்மார்ட்போனில் உள்ளன.

சமீபத்தில் இணையத்தில் கசிந்த தகவலின்படி இந்த மோட்டோ ஜி42 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.15,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Moto G42 May Launching Soon in India: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X