Home
Mobile

அசத்தலான அம்சங்களுடன் மோட்டோ ஜி42 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!

மோட்டோரோலா நிறுவனம் விரைவில் மோட்டோ ஜி42 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அசத்தலான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது ஆன்லைனில் கசிந்த மோட்டோ ஜி42 ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

அசத்தலான அம்சங்களுடன் மோட்டோ ஜி42 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

மோட்டோ ஜி42

மோட்டோ ஜி42 ஸ்மார்ட்போன் ஆனது 6.4-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும். பின்பு 2,400 x 1,080 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும்.

குறிப்பாக மோட்டோ ஜி42 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும்.

மோட்டோ ஜி42 ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவுடன் வெளிவரும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

அசத்தலான அம்சங்களுடன் மோட்டோ ஜி42 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

இந்த மோட்டோ ஜி42 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை சென்சார் உள்ளிட்ட பல ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். மேலும் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவரும் மோட்டோ ஜி42 ஸ்மார்ட்போன். அதேபோல் இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த மோட்டோ இ32எஸ் ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

மோட்டோ இ32எஸ்

அசத்தலான அம்சங்களுடன் மோட்டோ ஜி42 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

மோட்டோ இ32எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு 720×1600 பிக்சல் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின்வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

மோட்டோ இ32எஸ் ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி37 சிப்செட் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும். பின்பு இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 12 சார்ந்த MyUX இயங்குதளத்தை கொண்டு வெளிவந்துள்ளது. மோட்டோ இ32எஸ் ஸ்மார்ட்போன் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

மோட்டோ இ32எஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 16எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன.பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். பின்பு எல்இடி பிளாஷ் மற்றம் பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்.

அசத்தலான அம்சங்களுடன் மோட்டோ ஜி42 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

மோட்டோ இ32எஸ் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. பின்பு18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, ஃபேஸ் அன்லாக், கைரேகை சென்சார் எனப் பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். 4ஜி, டூயல் சிம் ஆதரவு, புளூடூத் 5.0, வைஃபை, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல இணைப்பு ஆதரவுகளுடன் இந்த புதிய மோட்டோ இ32எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இந்த சாதனம் மிஸ்டி சில்வர் மற்றும் ஸ்லேட் கிரே நிறங்களில் வெளிவந்துள்ளது.

image source: Gizpaw

Best Mobiles in India

English summary
Moto G42 May Launching Soon in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X