இன்று விற்பனைக்கு வந்த அசத்தலான மோட்டோ ஜி40 ஃபியூஷன் ஸ்மார்ட்போன்.!
மோட்டோரோலா நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு மோட்டோ ஜி40 ஃபியூஷன் மற்றும் மோட்டோ ஜி60 ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இன்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மோட்டோ ஜி40 ஃபியூஷன் பிளிப்கார்ட் வலைத்தளம் வழியே விற்பனைக்கு வந்துள்ளது.

மோட்டோ ஜி40 ஃபியூஷன் விலை
குறிப்பாக 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட மோட்டோ ஜி40 ஃபியூஷன் ஸ்மாரட்போனின் விலை ரூ.13,999-ஆக உள்ளது. மேலும் இதன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.15,999-ஆக உள்ளது.

பின்பு இந்த பிளிப்கார்ட் வலைத்தளத்தில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி மோட்டோ ஜி40 ஃபியூஷன் ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.1000 வரை தள்ளுபடி கிடைக்கும். அதேபோல் டைனமிக் கிரே மற்றும் Frosted Champagne நிறங்களில் இந்த புதிய மோட்டோ ஜி40 ஃபியூஷன் சாதனம் விற்பனைக்கு வந்துள்ளது. இப்போது மோட்டோ ஜி40 ஃபியூஷன் மற்றும் மோட்டோ ஜி60 சாதனங்களின்சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

மோட்டோ ஜி40 ஃபியூஷன் அம்சங்கள்
டிஸ்பிளே: 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே
120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
எச்டிஆர் 10 ஆதரவு
சிப்செட்: ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 732ஜி எஸ்ஒசி
ரேம்: 4ஜிபி/6ஜிபி
மெமரி: 64ஜிபி/128ஜிபி
ரியர் கேமரா: 64எம்பி பிரைமரி சென்சார் +8எம்பி அல்ட்ரா வைடு-ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார்
செல்பீ கேமரா: 16எம்பி
பேட்டரி: 6000 எம்ஏஎச் பேட்டரி
டர்போபவர் 20 பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11
புளூடூத் 5.0, 3.5 மிமீ ஆடியோ ஜாக்,
வைஃபை 802.11 ஏசி, என்எப்சி,
யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்

மோட்டோ ஜி60 அம்சங்கள்
டிஸ்பிளே: 6.8-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே
120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
எச்டிஆர் 10 ஆதரவு
சிப்செட்: ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 732ஜி எஸ்ஒசி
ரேம்: 6ஜிபி
மெமரி: 128ஜிபி
ரியர் கேமரா: 108எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு-ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார்
செல்பீ கேமரா: 32எம்பி
பேட்டரி: 6000 எம்ஏஎச் பேட்டரி
டர்போபவர் 20 பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11
புளூடூத் 5.0, 3.5 மிமீ ஆடியோ ஜாக்,
வைஃபை 802.11 ஏசி, என்எப்சி,
யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட மோட்டோ ஜி60 ஸ்மாரட்போனின் விலை ரூ.17,999-ஆக உள்ளது. அதேபோல் டைனமிக் கிரே மற்றும் Frosted Champagne நிறங்களில்வெளிவந்துள்ளது இந்த புதிய சாதனம்.


Click it and Unblock the Notifications