பட்டிதொட்டியெல்லாம் பறக்கும் ஆர்டர்.. 50எம்பி கேமரா.. IP64 ரேட்டிங்.. ஆஃபரில் மோட்டோ 5ஜி போன்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் இப்போது பிளிப்கார்ட் கோட் சேல் 2026 (Flipkart GOAT Sale 2026) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல அசத்தலான ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. அதேபோல் மிகவும் அதிகம் எதிர்பார்த்த மோட்டோ 5ஜி போன் ஒன்று சலுகை விலையில் வாங்க கிடைக்கிறது.
பிளிப்கார்ட் தளத்தில் தற்போது நடைபெறும் சிறப்பு விற்பனையில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட மோட்டோ ஜி37 ஸ்மார்ட்போனுக்கு 44 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.13,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த போனை கம்மி விலையில் வாங்கிவிட முடியும்.

மோட்டோ ஜி37 அம்சங்கள் (Moto G37 specifications): 6.67-இன்ச் ஃபுல் எச்டி எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் மோட்டோ ஜி37 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), 1050 நிட்ஸ் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
சக்திவாய்ந்த ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6400 (MediaTek Dimensity 6400) சிப்செட் உடன் இந்த புதிய மோட்டோ போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் ஆர்ம் மாலி 57 எம்சி2 ஜிபியு கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த போனில் உள்ளது.
அதுவும் 4ஜிபி வரை ரேம் மற்றும் 64பி வரை மெமரி ஆதரவுடன் இந்த மோட்டோ ஜி37 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.
குறிப்பாக 50எம்பி பிரைமரி கேமரா + 2-இன்-1 ஆம்பியன்ட் மற்றும் லைட் சென்சார் உடன் இந்த மோட்டோ ஜி37 ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது.
தரமான டால்பி அட்மாஸ் (Dolby Atmos), ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio), 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக் (3.5mm Headphone Jack) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த மோட்டோ ஜி37 ஸ்மார்ட்போனில் உள்ளன. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான IP64 ரேட்டிங்கையும் பெற்றுள்ளது மோட்டோ ஜி37 போன். இதுதவிர MIL-STD 810H சான்றிதழ் பெற்றுள்ளது இந்த புதிய போன். Hello UX சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த மோட்டோ ஜி37 ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
மேலும் 5200எம்ஏஎச் பேட்டரி உடன் மோட்டோ ஜி37 போன் வெளியாகி உள்ளது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 20W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. அதேபோல் 5ஜி, வைஃபை 5, புளூடூத் 5.4, என்எப்சி, எப்எம் ரேடியோ, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. பான்டோன் இம்பெனட்ரேபிள் (Pantone Impenetrable), பான்டோன் நாட்டிக்கல் ப்ளூ ( Pantone Nautical Blue) மற்றும் பான்டோன் ஃகாப்ரி ( Pantone Capri) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications