அறிமுகமானது புதிய Moto 5ஜி போன்.. 50எம்பி கேமரா.. ஆண்ட்ராய்டு 16 OS.. டால்பி அட்மாஸ்.. எந்த மாடல்?
மோட்டோரோலா நிறுவனம் புதிய மோட்டோ ஜி37 ஸ்மார்ட்போனை உலக சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது புதிய மோட்டோ ஜி37 ஸ்மார்ட்போனின் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
மோட்டோ ஜி37 அம்சங்கள் (Moto G37 specifications): 6.67-இன்ச் ஃபுல் எச்டி எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் மோட்டோ ஜி37 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

தரமான ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (MediaTek Dimensity 6300) சிப்செட் உடன் இந்த புதிய மோட்டோ போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் கேமிங் ஆப்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்தலாம்.
12ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி ஆதரவுடன் இந்த மோட்டோ ஜி37 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.
50எம்பி பிரைமரி கேமரா + 2-இன்-1 ஆம்பியன்ட் மற்றும் ஃப்ளிக்கர் லைட் சென்சார் உடன் இந்த மோட்டோ ஜி37 ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது.
டால்பி அட்மாஸ் (Dolby Atmos), ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio), 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக் (3.5mm Headphone Jack) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த மோட்டோ ஜி37 ஸ்மார்ட்போனில் உள்ளன. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான IP64 ரேடிங்கையும் பெற்றுள்ளது மோட்டோ ஜி37 போன். இதுதவிர MIL-STD 810H சான்றிதழ் பெற்றுள்ளது இந்த புதிய போன். Hello UX சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த மோட்டோ ஜி37 ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

5200எம்ஏஎச் பேட்டரி உடன் மோட்டோ ஜி37 போன் வெளியாகி உள்ளது. அதேபோல் 5ஜி, வைஃபை 5, புளூடூத் 5.4, என்எப்சி, எப்எம் ரேடியோ, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.
பான்டோன் இம்பெனட்ரேபிள் (Pantone Impenetrable), பான்டோன் நாட்டிக்கல் ப்ளூ ( Pantone Nautical Blue) மற்றும் பான்டோன் ஃபூஷியா ரெட் ( Pantone Fuchsia Red) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும். ஆனால் இந்த போனின் விற்பனை தேதி மற்றும் விலை குறித்த விவரங்களை மோட்டோரோலா நிறுவனம் வெளியிடவில்லை. கூடிய விரைவில் இந்த போனின் விலை மற்றும் விற்பனை தேதி வெளியாகும்.


Click it and Unblock the Notifications