Home
Mobile

ஆர்டருக்கு மேல ஆர்டர்.. ரூ.14,999 பட்ஜெட்ல 5200mAh பேட்டரி.. 20W டர்போ சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?

இப்படியான தள்ளுபடி விலைக்கு கிடைத்தால் ஆர்டர்கள் குவியாமல் இருக்குமா என்று கேட்கும்படி, மோட்டோ ஜி37 (Moto g37) ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது. மலிவான விலையில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6400 6என்எம் சிப்செட்டை கொடுத்து இருக்கிறது. இந்த மோட்டோ ஜி37 ஸ்மார்ட்போனின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

இப்போது, பிளிர்கார்ட் தளத்தில் 40 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு ரூ.15,999 விலைக்கு மோட்டோ ஜி37 ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.1,000 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.14,999 விலைக்கு இந்த மோட்டோ ஜி37 ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம். 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கிடைக்கும்.

ஆர்டருக்கு மேல ஆர்டர்.. ரூ.14,999 பட்ஜெட்ல 5200mAh பேட்டரி.. மாடல்?

மோட்டோ ஜி37 அம்சங்கள் (Moto g37 Specifications): 6.7 இன்ச் (1604 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே மற்றும் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கொடுத்துள்ளது. மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1050 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 120Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. 264 பிபிஐ பிக்சல் டென்சிட்டி உள்ளது. மேலும், டிஸ்பிளே கலர் பூஸ்ட் (Display Color Boost) உள்ளது.

வாட்டர் டச் (Water Touch) கிடைக்கிறது. ஆகவே, IP64 ரேட்டிங் கொண்ட வாட்டர் ரெசிஸ்டன்ட் (Water Resistant) கிடைக்கிறது. எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் (MIL-STD-810H) சர்டிபிகேஷன் கொண்ட மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கொண்ட மாடலாக இந்த மோட்டோ ஜி37 ஸ்மார்ட்போன் இருக்கிறது. டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) கொடுத்து இருக்கிறது.

7.85 எம்எம் தடிமன் மற்றும் 191 கிராம் எடை கொடுத்துள்ளது. வீகன் லெதர் பேனல் டிசைனில் கிடைக்கிறது. பான்டோன் நாட்டிக்கல் ப்ளூ (PANTONE Nautical Blue), பான்டோன் இம்பெனிட்ரபிள் (PANTONE Impenetrable) மற்றும் பான்டோன் காப்ரி (PANTONE Capri) ஆகிய கலர்களில் 3 கலர்களில் இந்த மோட்டோ ஜி37 ஸ்மார்ட்போன் வாங்கி கொள்ள கிடைக்கிறது.

ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali-G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டுடன் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6400 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6400 6nm) சிப்செட்டை கொடுத்து இருக்கிறது. 1 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட் மற்றும் 3 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களுடன் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுக்கப்பட்டுள்ளது.

குவாட் பிக்சல் டெக்னாலஜி (Quad Pixel Technology) கொண்ட 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. பிடிஏஎப் (PDAF) ஆட்டோ போகஸ், நைட் விஷன் மோட் (Night Vision Mode), ஷாட் ஆப்டிமைசேஷன் (Shot Optimization), ஆட்டோ ஸ்மைல் கேப்ச்சர் (Auto Smile Capture) கிடைக்கிறது. 2K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 8 எம்பி செல்பீ கேமராவில் பிக்சடு போகஸ் கிடைக்கிறது.

மேலும், 8x டிஜிட்டல் ஜூமிங் கிடைக்கிறது. கூகுள் போட்டோ எடிட்டிங் பீச்சர்களை இந்த மோட்டோ ஜி37 ஸ்மார்ட்போனில் அணுகலாம். ஆகவே, மேஜிக் எரைசர், போட்டோ அன்பிளர், ரீஇமேஜின், ஆட்டோ ஃபிரேம் உள்ளிட்ட பீச்சர்கள் கிடைக்கின்றன. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) உள்ளது.

5200mAh பேட்டரி மற்றும் 20W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கிறது. 6W ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. 2-இன்-1 லைட் சென்சார் (Light Sensor) கிடைக்கிறது. இதில் ஆம்பியன் லைட் சென்சார் (Ambient Light Sensor) மற்றும் ஃபிளிக்கர் டிடெக்டர் (Flicker Detector) கொடுக்கப்பட்டு இருக்கிறது. 3.5 எம்எம் ஆடியோ ஜாக் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Moto g37 With 4GB RAM Available At 40 Percent Discount on Flipkart Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X