Home
Mobile

7000mAh பேட்டரி.. 50MP கேமரா.. 120Hz டிஸ்பிளே.. ரூ.15,999 பட்ஜெட்ல புது மோட்டோ.. சேல் பிச்சிக்க போகுது!

மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனான மோட்டோ ஜி37 பவர் (moto g37 Power) மாடலை நாளை (மே 25) முதல் இந்திய மார்கெட்டில் விற்பனைக்கு கொண்டு வருகிறது. பிளாஸ்டிக் ஃபிரேம் மற்றும் வீகன் லெதர் வடிவமைப்புடன் வந்துள்ள இந்த போன், MIL-STD-810H சர்டிபிகேஷனுடன் பக்கா டியூரபிலிட்டி கொடுத்துள்ளது.

இது பான்டோன் இம்பெனட்ரபிள் (Pantone Impenetrable), பான்டோன் நாட்டிக்கல் ப்ளூ (Pantone Nautical Blue) மற்றும் பான்டோன் ஃகாப்ரி (Pantone Capri) ஆகிய மூன்று அட்டகாசமான கலர்களில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. இந்த மோட்டோ ஜி37 பவர் ஸ்மார்ட்போனின் விலை, வேரியண்ட்கள் மற்றும் முழு பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

7000mAh பேட்டரி.. 50MP கேமரா.. 120Hz டிஸ்பிளே.. ரூ.15,999 பட்ஜெட்ல!

4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ. 15,999 ஆகவும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ. 18,999ஆகவும் இருக்கிறது. பிளிப்கார்ட் தளத்தில் அறிமுக சலுகையுடன் ஆர்டர் செய்து கொள்ளலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு தள்ளுபடியும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இப்போது பீச்சர்களை பார்க்கலாம்.

மோட்டோ ஜி37 பவர் முக்கிய அம்சங்கள்: வாட்டர் டச் சப்போர்ட் கொண்ட 6.7 இன்ச் (1604 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது. இதில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 264 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 1050 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் டிஸ்பிளே கலர் பூஸ்ட் போன்ற சப்போர்ட்கள் உள்ளன.

ஆர்ம் மாலி ஜி57 எம்பி2 ஜிபியு கிராபிக்ஸ் கார்டு கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6400 6என்எம் சிப்செட் மூலம் இது இயங்குகிறது. 12 ஜிபி வரை ரேம் பூஸ்ட் செய்யும் வசதியும் இதில் உள்ளது. ஓஎஸ் அப்டேட்டை பார்க்கையில் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் கொண்ட இந்த போனுக்கு 1 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்டும், 5 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்டும் வழங்கப்படுகிறது.

மை யூஎக்ஸ் (MyUX) தளமும் இதில் உள்ளது. 8.89 எம்எம் தடிமனும், 215 கிராம் எடையும் கொண்ட இந்த போனில் 30W டர்போபவர் சார்ஜிங் மற்றும் 6W ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட பெரிய 7000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. பின்பக்க கேமராவில் எப்/1.8 அபெர்சர் மற்றும் குவாட் பிக்சல் டெக்னாலஜி கொண்ட 50 எம்பி மெயின் கேமரா வருகிறது.

மேலும், 2-இன்-1 லைட் சென்சாரும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஆம்பியன்ட் லைட் சென்சார், ஃபிளிக்கர் டிடெக்டர், பிடிஏஎப் (PDAF), எலக்ட்ரானிக் வீடியோ ஸ்டெபிலைசேஷன், 6X ஹை-ரெஸ் டிஜிட்டல் ஜூமிங், டூயல்-கேப்ச்சர் மற்றும் 2K வீடியோ ரெக்கார்டிங் அம்சங்கள் உள்ளன. 8 எம்பி முன்பக்க கேமராவில் எப்/2.0 அபெர்சர் மற்றும் பிக்சடு போகஸ் கொண்ட உள்ளது.

இதில் ஆட்டோ ஸ்மைல் கேப்ச்சர், ஷாட் ஆப்டிமைசேஷன், நைட் விஷன் மோட், போர்ட்ராய்டு ப்ரோ மோட் மற்றும் போட்டோ பூத் போன்ற அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. டால்பி அட்மோஸ் சப்போர்ட் கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 3.5 எம்எம் ஆடியோ ஜாக், 2 மைக்ரோபோன்கள், சைடு ஃபிங்கபிரிண்ட் சென்சார் மற்றும் மோட்டோ செக்யூர் போன்ற அம்சங்களும் இடம் பெற்றுள்ளன.

Best Mobiles in India

English summary
moto g37 Power With 7000mAh Battery To Go on Sale Tomorrow Price Starts At Rs 15999 Check Specs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X