Home
Mobile

SALE பொளக்கும்.. ரூ.15000 பட்ஜெட்ல 7000mAh பேட்டரி.. 30W சார்ஜிங்.. 50MP கேமரா.. புது Moto போன்.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் பட்ஜெட் விலையில் கிடைக்கும் 7000mAh பேட்டரி கொண்ட மாடலாக மோட்டோ ஜி37 பவர் ஸ்மார்ட்போன் வெளியாகி இருக்கிறது. ரூ.15,000 பட்ஜெட்டில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6400 சிப்செட் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கிறது. இந்த மோட்டோ ஜி37 பவர் ஸ்மார்ட்போனின் விவரங்களை பார்க்கலாம்.

ஆர்ம் மாலி ஜி57 எம்பி2 ஜிபியு (Arm Mali G57 MP2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6400 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6400 6nm) சிப்செட்டை இந்த மோட்டோ ஜி37 பவர் ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் 1 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட் கிடைக்கிறது. 5 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட் உள்ளது.

SALE பொளக்கும்.. ரூ.15000 பட்ஜெட்ல 7000mAh பேட்டரி.. 30W சார்ஜிங்!

மோட்டோ ஜி37 பவர் அம்சங்கள் (Moto g37 Power Specifications): வாட்டர் டச் (Water Touch) சப்போர்ட் கொண்ட 6.7 இன்ச் (1604 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை கொடுத்துள்ளது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 264 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கிடைக்கிறது. 1050 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் டிஸ்பிளே கலர் பூஸ்ட் (Display Color Boost) உள்ளது.

30W டர்போபவர் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 7000mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரிக்கு 6W ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. இந்த பேட்டரியுடன் 8.89 எம்எம் தடிமன் மற்றும் 215 கிராம் எடை கொடுத்துள்ளது. 50 எம்பி மெயின் கேமரா + 2-இன்-1 லைட் சென்சார் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆம்பியன்ட் லைட் சென்சார் உள்ளது.

ஃபிளிக்கர் டிடெக்டர் கிடைக்கிறது. எப்/1.8 அபெர்சர் மற்றும் குவாட் பிக்சல் டெக்னாலஜி (Quad Pixel Technology) கொடுக்கப்பட்டு உள்ளது. பிடிஏஎப் (PDAF) மற்றும் எலக்ட்ரானிக் வீடியோ ஸ்டெபிலைசேஷன் கிடைக்கிறது. 6X ஹை-ரெஸ் டிஜிட்டல் ஜூமிங் கிடைக்கிறது. டூயல்-கேப்ச்சர் (Dual Capture) மற்றும் 2K வீடியோ ரெக்கார்டிங் கொடுக்கப்பட்டு உள்ளது.

எப்/2.0 அபெர்சர் மற்றும் பிக்சடு போகஸ் (Fixed Focus) கிடைத்துள்ளது. ஆட்டோ ஸ்மைல் கேப்ச்சர் (Auto Smile Capture) மற்றும் ஷாட் ஆப்டிமைசேஷன் (Shot Optimization) கொடுத்துள்ளது. மேலும், நைட் விஷன் மோட் (Night Vision Mode), போர்ட்ராய்டு ப்ரோ மோட் (Portrait Pro Mode) மற்றும் போட்டோ பூத் (Photo Booth) உள்ளிட்ட பீச்சர்களையும் கொடுத்துள்ளது.

ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் கொடுத்துள்ளது. 2 மைக்ரோபோன்கள் கிடைக்கின்றன. மை யூஎக்ஸ் (MyUX) கொடுத்துள்ளது. சைடு ஃபிங்கபிரிண்ட் சென்சார் (Side fingerprint Sensor), மோட்டோ செக்யூர் உள்ளிட்ட பீச்சர்களும் கொடுக்கப்பட்டு உள்ளது. 12 ஜிபிக்கு ரேம் பூஸ்ட் உள்ளது.

மோட்டோ ஜி37 பவர் விலை (moto g37 Power Price): 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.15,999 ஆக இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.18,999 ஆக இருக்கிறது. பிளாஸ்டிக் ஃபிரேம் மற்றும் வீகன் லெதர் கொடுக்கப்பட்டு உள்ளது. MIL-STD-810H சர்டிபிகேஷனுடன் பக்கா டியூரபிலிட்டி கொண்டிருக்கிறது.

பான்டோன் இம்பெனட்ரபிள் (Pantone Impenetrable), பான்டோன் நாட்டிக்கல் ப்ளூ ( Pantone Nautical Blue) மற்றும் பான்டோன் ஃகாப்ரி ( Pantone Capri) ஆகிய மூன்று கலர்களில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. வருகிற மே 25ஆம் தேதி முதல் விற்பனை தொடங்குகிறது. பிளிப்கார்ட், மோட்டோரோலா.இன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் வாங்கி கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
Moto g37 Power With 7000mAh Battery Launched in India Sale From May 25 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X