Home
Mobile

ஆகஸ்ட் 8-ல் அள்ளுங்க.. 7000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. ஆஃபரில் Moto 5ஜி போன்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் வரும் ஆகஸ்ட் 8-ம் தேதி மிகவும் அதிகம் எதிர்பார்த்த பிளிப்கார்ட் ப்ரீடம் சேல் 2026 (Flipkart Freedom Sale 2026) எனும் சிறப்பு விற்பனை நடைபெற உள்ளது. இந்த சிறப்பு விற்பனையில் மோட்டோ ஜி37 பவர் (Moto G37 Power) ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலையில் கிடைக்க உள்ளது.

அதாவது 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட மோட்டோ ஜி37 பவர் ஸ்மார்ட்போன் ஆனது தற்போது ரூ.16,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் பிளிப்கார்ட் தளத்தில் நடைபெற உள்ள ப்ரீடம் சேல் 2026 எனும் சிறப்பு விற்பனையில் இந்த மோட்டோ 5ஜி போனை ரூ.13,999 விலையில் வாங்க முடியும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஆகஸ்ட் 8-ல் அள்ளுங்க.. ஆஃபரில் Moto 5ஜி போன்.. எந்த மாடல்?

மோட்டோ ஜி37 பவர் அம்சங்கள் (Moto G37 Power specifications): மீடியாடெக் டைமன்சிட்டி 6400 (MediaTek Dimensity 6400) சிப்செட் உடன் இந்த புதிய மோட்டோ போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் கேமிங் ஆப்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்தலாம்.

6.66-இன்ச் எச்டி எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் மோட்டோ ஜி37 பவர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில்120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), 1050 நிட்ஸ் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி ஆதரவுடன் இந்த மோட்டோ ஜி37 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா + 2-இன்-1 ஆம்பியன்ட் மற்றும் ஃப்ளிக்கர் லைட் சென்சார் உடன் இந்த மோட்டோ ஜி37 பவர் ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது.

டால்பி அட்மாஸ் (Dolby Atmos), ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio), 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக் (3.5mm Headphone Jack) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த மோட்டோ ஜி37 பவர் ஸ்மார்ட்போனில் உள்ளன. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor) வசதியும் இதில் உள்ளது.

ஆகஸ்ட் 8-ல் அள்ளுங்க.. ஆஃபரில் Moto 5ஜி போன்.. எந்த மாடல்?

தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான IP64 ரேடிங்கையும் பெற்றுள்ளது மோட்டோ ஜி37 பவர் போன். இதுதவிர MIL-STD 810H சான்றிதழ் பெற்றுள்ளது இந்த புதிய போன். Hello UX சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த மோட்டோ ஜி37 பவர் ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

7000எம்ஏஎச் பேட்டரி உடன் மோட்டோ ஜி37 பவர் போன் வெளியாகி உள்ளது. இந்த பேட்டரியை சார்ஜ் 30W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. அதேபோல் 5ஜி, வைஃபை 5, புளூடூத் 5.4, என்எப்சி, எப்எம் ரேடியோ, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

Best Mobiles in India

English summary
Moto G37 Power will be available at a discounted price during the Flipkart Freedom sale on August 8
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X