Home
Mobile

இதுக்கு செம்ம டிமாண்ட்.. 34 சதவீத ஆஃபரில் 7000mAh பேட்டரி போன்.. 30W சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?

மோட்டோரோலா நிறுவனத்தின் பட்ஜெட் விலை மாடலான மோட்டோ ஜி37 பவர் (Moto g37 Power) ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. 7000mAh பேட்டரி, 30W ஃபாஸ்ட் சார்ஜிங், 50 எம்பி கேமராவை கொடுத்தது மட்டுமல்லாமல், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ புரொடெக்சன் கொண்ட டிஸ்பிளேவும் கிடைக்கிறது.

34 சதவீத தள்ளுபடி விலைக்கு 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மோட்டோ ஜி37 பவர் மாடல் கிடைக்கிறது. ஆகவே, ரூ.19,999 விலையில் வாங்க முடியும். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.1,000 தள்ளுபடியும் கிடைக்கிறது. ஆகவே, ரூ.18,999 விலையில் வாங்கி கொள்ளும்படி இந்த மோட்டோ ஜி37 பவர் கிடைக்கிறது.

இதுக்கு செம்ம டிமாண்ட்.. 34 சதவீத ஆஃபரில் 7000mAh பேட்டரி போன்!

மோட்டோ ஜி37 பவர் அம்சங்கள் (Moto g37 Power Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6400 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6400 6nm) சிப்செட்டை இந்த மோட்டோ ஜி37 பவர் ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. ஆர்ம் மாலி ஜி57 எம்பி2 ஜிபியு கிராபிக்ஸ் கார்டு (Arm Mali G57 MC2 GPU) மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கிடைக்கிறது.

1 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட் மற்றும் 5 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட் கிடைக்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன் கொண்ட 6.7 இன்ச் (1604 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1050 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் வருகிறது.

மேலும், 264 பிபிஐ பிக்சல் டென்சிட்டி உள்ளது. வாட்டர் டச் மற்றும் கலர் பூஸ்ட் கிடைக்கிறது. 30W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 7000mAh பேட்டரி கிடைக்கிறது. 6W ரிவர்ஸ் சார்ஜிங் கிடைக்கிறது. இந்த பேட்டரியுடன் 8.89 எம்எம் தடிமன் கொண்டுள்ளது. 215 கிராம் எடை கொடுத்துள்ளது. 50 எம்பி மெயின் கேமரா + 2-இன்-1 லைட் சென்சார் கிடைக்கிறது.

இந்த கேமராவுக்கு குவாட் பிக்சல் டெக்னாலஜி (Quad Pixel Technology) கிடைக்கிறது. 6X ஹை-ரெஸ் டிஜிட்டல் ஜூம் செய்து கொள்ளலாம். 2K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் பிடிஏஎப் (PDAF) போகஸ் கிடைக்கிறது. எலக்ட்ரானிக் வீடியோ ஸ்டெபிலைசேஷன் (Electronic Video Stabilization) டெக்னாலஜி கொடுத்துள்ளது. 8 எம்பி செல்பீ கேமராவை இந்த மோட்டோ போன் கொடுக்கிறது.

இதில் ஆட்டோ ஸ்மைல் கேப்ச்சர் (Auto Smile Capture), ஷாட் ஆப்டிமைசேஷன் (Shot Optimization), நைட் விஷன் மோட் (Night Vision Mode) கிடைக்கிறது. மேலும், போர்ட்ராய்டு ப்ரோ மோட் (Portrait Pro Mode) மற்றும் போட்டோ பூத் (Photo Booth) போன்ற பீச்சர்களும் கிடைக்கின்றன. சைடு மவுண்டெட் ஃபிங்கபிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) கொடுக்கப்பட்டு இருக்கிறது.

டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) உள்ளன. மேலும், IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் (Dust Splash Resistant) கிடைக்கிறது. எம்ஐஎல்-எஸ்டிடி 810எச் (MIL-STD 810H) சர்டிபிகேஷன் கொண்ட மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டியை இந்த மோட்டோ ஜி37 பவர் ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது.

5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 5 (Wi-Fi 5), ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) மற்றும் ஜிபிஎஸ் (GPS) ஆகிய கனெக்டிவிட்டிகளை கொடுத்துள்ளது. பான்டோன் இம்பெனட்ரபிள் (Pantone Impenetrable), பான்டோன் நாட்டிக்கல் ப்ளூ (Pantone Nautical Blue) மற்றும் பான்டோன் ஃகாப்ரி (Pantone Capri) கலர்களில் வாங்கி கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
Moto g37 Power Available At 34 Percent Discount in Flipkart Check Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X