எடுத்ததும் ரூ.5000 ஆபர்.. ரூ.10999 க்கு 5ஜி, 7000mAh பேட்டரி, 12GB ரேம்.. மொத்த Phones-ஐயும் முடிச்ச Moto!
இந்தியாவில் மோட்டோரோலா (Motorola) நிறுவனத்தின் லேட்டஸ்ட் "பிக் பேட்டரி" ஸ்மார்ட்போன் ஆக மோட்டோ ஜி37 பவர் (Moto G37 Power) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 7000mAh பேட்டரியுடன் வரும் இந்த ஸ்மார்ட்போன், 5,200mAh பேட்டரி கொண்ட மோட்டோ ஜி37 (Moto G37) உடன் சேர்ந்து அறிமுகமாகி உள்ளது.
மாடல் பெயர் குறிப்பிடுவது போலவே மோட்டோ ஜி37 பவர் ஸ்மார்ட்போன் ஆனது, மோட்டோரோலா நிறுவனத்தின் சமீபத்திய ஜி-சீரிஸின் ஒரு பகுதியாகும். மேலும் இது என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன் வாங்குபவர்களை இலக்காக கொண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. என்ன விலை? என்ன அம்சங்கள்? எப்போது முதல் விற்பனை? இதோ விவரங்கள்:

மோட்டோ ஜி37 பவர் ஸ்மார்ட்போனின் விலை: இந்திய சந்தையில் இந்த லேட்டஸ்ட் மோட்டோரோலா ஸ்மார்ட்போனின் பேஸிக் 4ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.15,999 க்கும், 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.18,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
மோட்டோ ஜி37 பவர் ஸ்மார்ட்போனின் விற்பனை தேதி: இந்த ஸ்மார்ட்போன் வருகிற மே 25 ஆம் தேதி முதல் பிளிப்கார்ட் (Flipkart), மோட்டோரோலா இந்தியா (Motorola India) இணையதளம் மற்றும் நாடு முழுவதும் உள்ள சில்லறை விற்பனை கடைகள் மூலம் விற்பனைக்கு வரும்.
மேலும் மோட்டோ ஜி37 பவர் ஸ்மார்ட்போன் ஆனது Pantone Capri, Pantone Impenetrable மற்றும் Pantone Nautical Blue என மொத்தம் 3 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும். இதே தேதியில் மோட்டோ ஜி37 (4ஜிபி ரேம் + 64ஜிபி) ரூ.13,999 க்கு வாங்க கிடைக்கும்.
மோட்டோ ஜி37 பவர் ஸ்மார்ட்போனின் விற்பனை சலுகைகள்: அறிமுக சலுகைகளின் ஒரு பகுதியாக, வாடிக்கையாளர்கள் ஐடிஎப்சி (IDFC), ஐசிஐசிஐ (ICICI), மற்றும் எஸ்பிஐ (SBI) கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகள் மூலம் மோட்டோ ஜி37 ஸ்மார்ட்போனை வாங்கும் போது ரூ.5,000 உடனடி தள்ளுபடியை பெறலாம் (ஆக ரூ.10,999 க்கு வாங்கலாம்). ஐடிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டு இஎம்ஐ பரிவர்த்தனைகளுக்கு ரூ.5,500 உடனடி தள்ளுபடி கிடைக்கும்.
மோட்டோ ஜி37 பவர் ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்:
- 8-பிட் 6.6-இன்ச் எச்டி பிளஸ் (720 x 1,604) எல்சிடி டிஸ்பிளே
- 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 264பிபிஐ பிக்சல் டென்சிட்டி
- 120ஹெர்ட்ஸ் டச் சாம்பிளிங் ரேட்
- 1050 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ் (HBM)
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ ப்ரொடெக்ஷன்
- மீடியாடெக் டைமென்சிட்டி 6400 சிப்செட்
- 8ஜிபி வரையிலான LPDDR4x ரேம்
- 128ஜிபி யுஎப்ஸ் 2.2 ஸ்டோரேஜ்
- ரேம் பூஸ்ட் அம்சத்தை பயன்படுத்தி 12ஜிபி வரை ரேம் விரிவாக்கம் செய்யும் ஆதரவு
- மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 1TB வரை விரிவாக்கக்கூடிய ஸ்டோரேஜ் ஆதரவு
- டூயல் சிம் (நானோ + நானோ) ஆதரவு
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- எப்/1.8 அபெர்ச்சர் மற்றும் PDAF உடன் கூடிய 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா
- இரண்டாம் நிலை கேமரா - ஆம்பியண்ட் லைட் சென்சார் மற்றும் ஃபிளிக்கர் டிடெக்டர் ஆகியவற்றை உள்ளடக்கிய 2-இன்-1 ஒளி சென்சார்
- செல்பீகள் மற்றும் வீடியோ கால்களுக்காக 8-மெகாபிக்சல் கேமரா
- IP64 தூசி மற்றும் நீர் தெறிப்பு எதிர்ப்பு திறன்
- MIL-STD-810H சான்றிதழ்
- பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்காக பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்
- 30W பாஸ்ட் வயர்டு சார்ஜிங் ஆதரவு
- 6W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங்
- 7,000mAh பேட்டரி
- 5ஜி, 4ஜி LTE, வைஃபை 5, ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ், ஏ-ஜிபிஎஸ், க்ளோனாஸ், கலிலியோ, QZSS, BeiDou, 3.5மிமீ ஹெட்போன் ஜாக் மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட்
- அளவீட்டில் 166.23 x 76.50 x 8.89 மிமீ
- எடையில் 215 கிராம்.


Click it and Unblock the Notifications