Home
Mobile

ஆர்டர் அள்ளுமே.. ரூ.15,998 பட்ஜெட்ல 7000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. ஆஃபரில் மோட்டோ 5G போன்.. எந்த மாடல்?

மோட்டோ ஜி37 பவர் 5ஜி (Moto G37 Power 5G) ஸ்மார்ட்போன் தற்போது அமேசான் தளத்தில் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. அதுவும் இந்த ஸ்மார்ட்போன் அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த மோட்டோ போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்ககலாம்.

அமேசான் தளத்தில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட மோட்டோ ஜி37 பவர் 5ஜி போனுக்கு 40 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.15,998 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் கூடுதல் சலுகைகளும் உள்ளன. ஆகவே இந்த போனை கம்மி விலையில் வாங்கிவிட முடியும்.

ஆர்டர் அள்ளுமே.. ஆஃபரில் மோட்டோ 5G போன்.. எந்த மாடல்?

மோட்டோ ஜி37 பவர் 5ஜி அம்சங்கள் (Moto G37 Power 5G specifications): மோட்டோ ஜி37 பவர் 5ஜி 6.66-இன்ச் எச்டி எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), 1050 நிட்ஸ் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 6400 (MediaTek Dimensity 6400) சிப்செட் உடன் இந்த புதிய மோட்டோ போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் கேமிங் ஆப்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்தலாம்.

குறிப்பாக 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி உடன் மோட்டோ ஜி37 பவர் 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.

அதுவும் 50எம்பி பிரைமரி ரியர் கேமரா உடன் இந்த மோட்டோ ஜி37 பவர் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது.

தனித்துவமான டால்பி அட்மாஸ் (Dolby Atmos), ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio), 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக் (3.5mm Headphone Jack) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த மோட்டோ ஜி37 பவர் 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளன. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor) வசதியும் இதில் உள்ளது.

ஆர்டர் அள்ளுமே.. ஆஃபரில் மோட்டோ 5G போன்.. எந்த மாடல்?

அதேபோல் தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான IP64 ரேடிங்கையும் பெற்றுள்ளது மோட்டோ ஜி37 பவர் 5ஜி போன். இதுதவிர MIL-STD 810H சான்றிதழ் பெற்றுள்ளது இந்த புதிய போன். Hello UX சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த மோட்டோ ஜி37 பவர் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

மேலும் உடன் மோட்டோ ஜி37 பவர் 5ஜி போன் வெளியாகி உள்ளது. இந்த பேட்டரியை சார்ஜ் 30W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. அதேபோல் 5ஜி, வைஃபை 5, புளூடூத் 5.4, என்எப்சி, எப்எம் ரேடியோ, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

Best Mobiles in India

English summary
Moto g37 Power 5G with 4GB RAM available at 40 percent discount on Amazon: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X