Home
Mobile

அவசரப்பட்டு எந்த போனும் வாங்காதீங்க.. டால்பி அட்மாஸ்.. 50எம்பி கேமரா.. வருகிறது Moto போன்.. எந்த மாடல்?

மோட்டோரோலா நிறுவனம் புதிய மோட்டோ ஜி37 ஸ்மார்ட்போனை வரும் மே 19-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த போன் அசத்தலான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவரும். இந்நிலையில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு இந்த போனின் விலை வெளியாகி உள்ளன.

ஆன்லைனில் வெளியான தகவலின்படி, மோட்டோ ஜி37 ஸ்மார்ட்போன் ரூ.20,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. பான்டோன் இம்பெனட்ரேபிள் (Pantone Impenetrable), பான்டோன் நாட்டிக்கல் ப்ளூ ( Pantone Nautical Blue) மற்றும் பான்டோன் ஃபூஷியா ரெட் (Pantone Fuchsia Red) நிறங்களில் இந்த போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

அவசரப்பட்டு எந்த போனும் வாங்காதீங்க.. வருகிறது Moto போன்.. எந்த மாடல்?

மோட்டோ ஜி37 அம்சங்கள் (Moto G37 specifications): 6.67-இன்ச் ஃபுல் எச்டி எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் மோட்டோ ஜி37 அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6400 (MediaTek Dimensity 6400) சிப்செட் கொண்டுள்ளது இந்த புதிய மோட்டோ போன் வெளிவரும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் கேமிங் ஆப்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்தலாம்.

12ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி ஆதரவுடன் இந்த மோட்டோ ஜி37 ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.

மோட்டோ ஜி37 ஸ்மார்ட்போன் பின்புறம் 50எம்பி பிரைமரி கேமரா + 2-இன்-1 ஆம்பியன்ட் மற்றும் ஃப்ளிக்கர் லைட் சென்சார் ஆகிய கேமராக்கள் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது.

தரமான டால்பி அட்மாஸ் (Dolby Atmos), ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio), 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக் (3.5mm Headphone Jack)
உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த மோட்டோ ஜி37 ஸ்மார்ட்போனில் உள்ளன. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அவசரப்பட்டு எந்த போனும் வாங்காதீங்க.. வருகிறது Moto போன்.. எந்த மாடல்?

தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான IP64 ரேடிங்கையும் பெற்றுள்ளது மோட்டோ ஜி37 போன். இதுதவிர MIL-STD 810H சான்றிதழ் பெற்றுள்ளது இந்த புதிய போன். Hello UX சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த மோட்டோ ஜி37 ஸ்மார்ட்போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

5200எம்ஏஎச் பேட்டரி உடன் மோட்டோ ஜி37 போன் அறிமுகமாகும். அதேபோல் 5ஜி, வைஃபை 5, புளூடூத் 5.4, என்எப்சி, எப்எம் ரேடியோ, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

Best Mobiles in India

English summary
Moto G37 India price and specifications revealed ahead of launch: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X