கொஞ்சம் பொறுங்க வாரேன்.. பட்ஜெட் விலை.. 6790mAh பேட்டரி.. 20MP செல்பி கேமரா.. புது Moto 5ஜி போன் ரெடி..
மோட்டோரோலா நிறுவனம் அடுத்து மோட்டோ ஜி36 (Moto G36) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. தற்போது TENAA சான்றிதழ் தளத்தில் XT2533-4 என்ற மாடல் நம்பர் உடன் காணப்பட்டுள்ளது. முதலில் இந்த மோட்டோ போன் சீனாவில் தான் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதன்பின்பு தான் இந்தியாவில் அறிமுகமாகும். மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.
மோட்டோ ஜி36 (Moto G36 specifications): 6.73-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஎப்டி டிஸ்பிளே வசதியுடன் இந்த மோட்டோ ஜி36 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அதேபோல் 4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி மெமரி என நான்கு வேரியண்ட்களில் மோட்டோ ஜி36 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.
50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த புதிய மோட்டோ ஜி36 ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடீயாகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும்.
சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி சிப்செட் உடன் இந்த புதிய மோட்டோ போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ஆண்ட்ராய்டு 16 இயங்குதள வசதியுடன் மோட்டோ ஜி36 ஸ்மாரட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
6790mAh பேட்டரி உடன் மோட்டோ ஜி36 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த மோட்டோ போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த போனின் பேட்டரியை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.
சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor), பேஸ் அன்லான் வசதியுடன் மோட்டோ ஜி36 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 3.5எம்எம் ஆடியோ ஜாக் (3.5mm audio jack), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட வசதிகளும் இந்த போனில் உள்ளன.
210 கிராம் எடை கொண்டுள்ளது மோட்டோ ஜி36 ஸ்மார்ட்போன். பின்பு 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த மோட்டோ போனில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த மோட்டோ ஜி36 போன் பட்ஜெட் விலையில் வெளிவரும்.
photo credit: TENAA, gsmarena


Click it and Unblock the Notifications








