இதுக்கு மொத்தமா வெயிட்டிங்.. ரூ.10,999-க்கு Moto 5ஜி போன்.. 5000mAh பேட்டரி.. 50MP கேமரா.. எந்த மாடல்?
மோட்டோரோலா நிறுவனத்தின் பட்ஜெட் விலை மாடலான மோட்டோ ஜி35 5ஜி (Moto g35 5G) ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் வேரியண்ட் களமிறங்கி இருக்கிறது. 5000mAh பேட்டரி, 18W சார்ஜிங், 50 எம்பி கேமரா, விஷன் பூஸ்டர் டிஸ்பிளே போன்ற பீச்சர்களுடன் அடிமட்ட விலைக்கு கிடைக்கிறது. இந்த மோட்டோ ஜி35 5ஜி ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்திய மார்கெட்டில் ஏற்கனவே, 4 ஜிபி ரேம் வேரியண்ட் கிடைக்கிறது. இப்போது, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் வெளியாகி இருக்கிறது. பிளிப்கார்ட் தளத்தில் அக்டோபர் 6ஆம் தேதி விற்பனை தொடங்குகிறது. மார்கெட் விலை ரூ.15,499ஆக இருக்கிறது. இருப்பினும், அறிமுக சலுகையி்ல் ரூ.11,999 பட்ஜெட்டில் வருகிறது. பேங்க் டிஸ்கவுண்ட் போக ரூ.10,999 விலைக்கு வருகிறது.

மோட்டோ ஜி35 5ஜி அம்சங்கள் (Moto g35 5G Specifications): இந்த மோட்டோ ஸ்மார்ட்போனில் 6.72 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டில் கிடைக்காத ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மட்டுமல்லாமல், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது.
இந்த டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) கிடைக்கிறது. மேலும், எச்டிஆர்10 (HDR10), 391 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் விஷன் பூஸ்டர் (Vison Booster) கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) அப்டேட் கிடைக்கிறது. மேலும், 2 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்கள் வருகிறது.
மாலி ஜி58 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்ட ஆக்டா கோர் யுனிசோக் டி760 6என்எம் (Octa Core UNISOC T760 6nm) சிப்செட் கிடைக்கிறது. இந்த மோட்டோ ஜி35 5ஜி ஸ்மார்ட்போனில் 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கிடைக்கிறது. மெயின் கேமராவில் PDAF போகஸ் கிடைக்கிறது.
அல்ட்ரா வைடு கேமராவில் பிக்சட் போகஸ் (Fixed Focus) கிடைக்கிறது. ஹைப்பர்லேப்ஸ், ஸ்லோவ் மோஷன் மட்டுமல்லாமல், வீடியோ ஸ்டெபிலைசேஷன் கிடைக்கிறது. மேலும், ப்ரோ மோட், நைட் விஷன், ஷாட் ஆப்டிமைசேஷன் மற்றும் ஆட்டோ எச்டிஆர் போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. 16 எம்பி செல்பீ கேமராவை இந்த மோட்டோ ஸ்மார்ட்போன் கொடுக்கிறது.
18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி மற்றும் டைப்-சி சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டிலும் ஸ்ட்ரீயோ ஸ்பீக்கர்களை (Stereo Speakers) கிடைக்கிறது. இதுபோக டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) கிடைக்கிறது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் கிடைக்கிறது.
5ஜி, டூயல் 4ஜி வோஎல்டிஇ, ப்ளூடூத் 5.0 மற்றும் வை-பை 802 போன்ற கனெக்டிவிட்டி பீச்சர்களை கொடுக்கிறது. இந்த மோட்டோ ஜி35 5ஜி ஸ்மார்ட்போனில் லீப் கிரீன் (Leaf Green), மிட்நைட் பிளாக் (Midnight Black) மற்றும் குவாவா ரெட் (Guava Red) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. IP52 ரேட்டிங் கொண்ட வாட்டர் ரெப்பலென்ட் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








