Home
Mobile

மட்ட ரேட்டுல 5000mAh பேட்டரி.. 50MP கேமரா.. 8GB ரேம்.. ரூ.10,999 பட்ஜெட்ல புது வேரியண்ட்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் மோட்டோ ஜி35 5ஜி (Moto g35 5G) ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் வேரியண்ட்டின் விற்பனை தொடங்கிவிட்டது. பேங்க் டிஸ்கவுண்ட் போக அடிமட்ட விலைக்கு கிடைப்பதால், விற்பனையில் பட்டையை கிளப்புகிறது. ஆக்டா கோர் யுனிசோக் டி760 6என்எம் சிப்செட் கொண்ட இந்த மோட்டோ ஜி35 5ஜி ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

மோட்டோ ஜி35 5ஜி பிளிப்கார்ட் விலை (Moto g35 5G Flipkart Price): இந்த மோட்டோ ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.11,999ஆக இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் ரூ.1,000 உடனடி பேங்க் டிஸ்கவுண்ட் போக விற்பனைக்கு கிடைக்கிறது. ஈஎம்ஐ ஆப்ஷனுக்கும் ரூ.1,000 உடனடி பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

மட்ட ரேட்டுல 5000mAh பேட்டரி.. 50MP கேமரா.. 8GB ரேம்.. ரூ.10,999-க்கு!

ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு, எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டு போன்ற மல்டிபிள் கார்டுகளுக்கு இந்த டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.10,999 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம். மேலும், வழக்கமாக கிடைக்கும் எக்ஸ்சேஞ்ச் சலுகையும் இந்த ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கிறது. இதேபோல ஏற்கனவே வெளியான 4ஜி ரேம் வேரியண்ட்டுக்கும் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

இந்த மோட்டோ ஜி35 5ஜி ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.8,999ஆக இருக்கிறது. இந்த விலையில் ரூ.450 உடனடி பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.8,549 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். இப்போது, இந்த ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கும் பீச்சர்கள் மற்றும் டிசைன் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

மோட்டோ ஜி35 5ஜி அம்சங்கள் (Moto g35 5G Specifications): இந்த மோட்டோ ஸ்மார்ட்போனில் லீப் கிரீன் (Leaf Green), மிட்நைட் பிளாக் (Midnight Black) மற்றும் குவாவா ரெட் (Guava Red) ஆகிய கலர்கள் கிடைக்கின்றன. கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) புரொடெக்சன் மற்றும் வீகன் லெதர் பேனல் டிசைன் கிடைக்கிறது.

ஒட்டுமொத்தமாக IP52 ரேட்டிங் கொண்ட வாட்டர் ரெப்பலென்ட் கிடைக்கிறது. ஆகவே, பட்ஜெட் விலையிலும் டிசைன் மற்றும் டியூரபிலிட்டி பீச்சர்கள் பக்காவாகவே இருக்கின்றன. ஓரளவு பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி ஆக்டா கோர் யுனிசோக் டி760 6என்எம் (Octa Core UNISOC T760 6nm) சிப்செட் மற்றும் அதற்கு மாலி ஜி58 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது.

இருப்பினும், லேட்டஸ்ட் யுஐ கொடுக்கும்படி ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கிடைக்கிறது. இதுபோக 1 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட் மற்றும் 2 வருட செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கின்றன. மோட்டோவில் வழக்கமாக கிடைக்கும் விஷன் பூஸ்டர் (Vison Booster) சப்போர்ட் கொண்ட 6.72 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே இதில் வருகிறது.

இந்த டிஸ்பிளேவுக்கு 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 391 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது. மேலும், 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் பெற்று கொள்ளலாம். ஓடிடி பிரியர்களுக்கு ஏற்ப ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மற்றும் எச்டிஆர்10 (HDR10) கொடுக்கப்பட்டு இருக்கிறது. டிஸ்பிளேவை போலவே கேமராவும் பக்காவாக இருக்கிறது.

50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 16 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. இந்த மோட்டோ ஜி35 5ஜி ஸ்மார்ட்போனில் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி கிடைக்கிறது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) ஆடியோ கொண்ட ஸ்ட்ரீயோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) வருகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Moto g35 5G With 8GB RAM Available At Rs 10999 in Flipkart Offer Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X