வெளுக்குது பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. 18W சார்ஜிங்.. 1TB மெமரி.. எந்த மாடல்?
ரூ.10000 பட்ஜெட்டில் 50 எம்பி மெயின் கேமரா, 5000mAh பேட்டரி, 18W ஃபாஸ்ட் சார்ஜிங், 1 டிபி மெமரி சப்போர்ட் போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாமல், ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்புடன் வெளியான மோட்டோ ஜி35 5ஜி (Moto g35 5G) போனின் விற்பனை பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் தொடங்கி இருக்கிறது. இந்த மோட்டோ 5ஜி வேரியண்ட்டின் முழு பீச்சர்களை பார்த்துவிட்டு, இந்த பட்ஜெட்டுக்கு இது பக்காவான போனா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
இந்த மோட்டோ பட்ஜெட்டில் வெளியாகி இருந்தாலும், வேகன் லெதர் பேனல், விர்ச்சுவல் ரேம், 20W சார்ஜர் போன்றவற்றை கொடுக்கிறது. ஆகவே, பிரீமியம் லுக்கில் கிடைக்கும் பட்ஜெட் போன்களில் இந்த மோட்டோ ஜி35 5ஜி போனும் இடம்பிடித்துள்ளது. சிப்செட் மட்டும் வழக்கமான ஸ்னாப்டிராகன் இல்லாமல், யுனிசோக் மாடலாக கிடைக்கிறது.

மோட்டோ ஜி35 5ஜி அம்சங்கள் (Moto g35 5G Specifications): இந்த ஜி35 போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மட்டுமல்லாமல், ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) அப்டேட் மற்றும் 2 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட் கிடைக்கிறது. பட்ஜெட் 5ஜி மாடல்களில் வரும் ஆக்டா கோர் 6 என்எம் யுனிசோக் டி760 (Octa Core 6nm UNISOC T760) சிப்செட் கிடைக்கிறது.
இந்த மோட்டோவில் லெதர் பேக் பேனல் மட்டுமல்லாமல், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டிலும் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொடுக்கும் 6.72 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் எச்டிஆர்10 (HDR10) சப்போர்ட் பெற்று கொள்ளலாம்.
மேலும், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. இந்த மோட்டோ ஜி35 5ஜி போனில் 2 வேரியண்ட்கள் இருக்கின்றன. ஆனால், 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் மட்டுமே விற்பனைக்கு வந்துள்ளது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் வரவில்லை. 4 ஜிபிக்கான டைனாமிக் ரேம் கிடைக்கிறது.
128 ஜிபி மெமரிக்கு மேல் ஸ்டோரேஜ் வேண்டுமானால், 1 டிபி மெமரிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு (microSD) சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே, இந்த மோட்டோவில் ஹைபிரிட் சிம் சிலாட் (Hybrid SIM Slot) மட்டுமல்லாமல், மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் பேக் செய்யப்பட்டுள்ளது. இந்த சிலாட் போலவே ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) வருகின்றன.
இந்த ஸ்பீக்கர்கள் மற்றும் ஆடியோ அவுட்புட்டுக்கு டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் உள்ளது. மேலும், ரூ.10000 பட்ஜெட்டில் கிடைக்கும் மோட்டோ போன்களில் அதிகம் பேக் செய்யப்படும் 5000mAh பேட்டரி மற்றும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் இந்த மோட்டோ ஜி35 5ஜி போனிலும் கிடைக்கிறது. IP52 வாட்டர் ரெப்பிலன்ட் சப்போர்ட் உள்ளது.
இப்போது, பிளிப்கார்ட் மற்றும் மோட்டோரோலா ஆன்லைன் தளங்களில் விற்பனைக்கு வந்துள்ளது. 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டை ரூ.9999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். லெதர் பேனல் டிசைனில் மிட்நைட் பிளாக் (Midnight Black), லீப் கிரீன் (Leaf Green) மற்றும் குவாவா ரெட் (Guava Red) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications








