Home
Mobile

அடிச்சு தூக்கிய பிளிப்கார்ட்.. ரூ.9,499 பட்ஜெட்ல 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. 18W சார்ஜிங்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் மோட்டோ ஜி35 5ஜி (Moto g35 5G) போனுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. அடிமட்ட பட்ஜெட்டில் 50 எம்பி கேமரா மட்டுமல்லாமல், 5000mAh பேட்டரி, 18W ஃபாஸ்ட் சார்ஜிங், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 புரொடெக்சன் டிஸ்பிளே போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. யுனிசோக் டி760 சிப்செட் கொண்ட இந்த மோட்டோ ஜி35 5ஜி போனின் விலை, தள்ளுபடி மற்றும் பீச்சர் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இந்திய மார்கெட்டில் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடலின் விலை ரூ.9,999ஆக இருக்கிறது. இந்த விலையில் ரூ.500 பேங்க் தள்ளுபடி போக இப்போது ஆர்டர் செய்ய கிடைக்கிறது. ஆகவே, ரூ.9,499 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலம் ஆர்டர் செய்தால் இந்த தள்ளுபடியை பெற்று கொள்ளலாம்.

அடிச்சு தூக்கிய பிளிப்கார்ட்.. ரூ.9,499 பட்ஜெட்ல 50MP கேமரா.. 5000mAh!

இதுபோக ரூ.8,350 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளை கொடுக்கிறது. இந்த பட்ஜெட்டில் வீகன் லெதர் பேனல் (Vegan Leather Panel) மட்டுமல்லாமல், IP52 ரேட்டிங் கொண்ட வாட்டர் ரெப்பெல்லன்ட் கொடுக்கிறது. இந்த டிசைனில் லீப் கிரீன் (Leaf Green), மிட்நைட் பிளாக் (Midnight Black) மற்றும் குவாவா ரெட் (Guava Red) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

அதேபோல இந்த பட்ஜெட்டில் எதிர்பார்க்காதபடி கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) புரொடெக்சன் கொடுக்கிறது. மேலும், வழக்கமான டூயல் ரியர் கேமரா சிஸ்டம் கிடைக்கிறது. இதில் குவாட் பிக்சல் டெக்னாலஜி கிடைப்பதால், மிட்-ரேஞ்ச் மாடல்களுக்கு நிகரான கேமரா அவுட்புட் பெற்று கொள்ளலாம். ஆகவே, ஒட்டுமொத்தமாக டிசைனில் பட்டையை கிளப்புகிறது.

மோட்டோ ஜி35 5ஜி அம்சங்கள் (Moto g35 5G Specifications): இந்த மோட்டோவில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மட்டுமே கிடைக்கிறது, இருப்பினும், ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) அப்டேட் மற்றும் 2 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்களை கொடுத்து இருக்கிறது. மீடியாடெக் அல்லது ஸ்னாப்டிராகன் சிப்செட் எதிர்பார்க்க முடியாது.

ஏனென்றால், இந்த பட்ஜெட்டில் சிப்செட்டைவிட மற்ற பீச்சர்கள் பக்காவாக இருக்கின்றன. ஆகவே, இதில் ஆக்டா கோர் யுனிசோக் டி760 6என்எம் (Octa Core UNISOC T760 6nm) சிப்செட் கிடைக்கிறது. இந்த சிப்செட்டுக்கு ஏற்ப அவுட்புட் கொடுக்கும்படி மாலி ஜி58 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே, மீடியம் பர்ஃபாமென்ஸ் கிடைக்கும்.

இந்த மோட்டோ ஜி35 5ஜி போனில் 128 ஜிபி ஸ்டோரேஜ் மட்டுமல்லாமல், 1 டிபிக்கு மைக்ரோஎஸ்டி கார்டு பயன்படுத்தி கொள்ள முடியும். இதற்காக டூயல் சிம் சிலாட் மட்டுமல்லாமல், எஸ்டி கார்டு சிலாட் பேக் செய்யப்பட்டுள்ளது. முன்பே சொன்னதை போல குவாட் பிக்சல் டெக்னாலஜி கொண்ட 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது.

16 எம்பி செல்பீ கேமராவை கொடுத்து இருக்கிறது. இந்த பட்ஜெட்டில் 15W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமே பெரும்பாலான மாடல்களில் கிடைக்கிறது ஆனால், இதில் 18W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்களுக்கு பதிலாக ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் அதில் டால்பி அட்மோஸ் கொடுக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Moto g35 5G With 50MP Camera Available At Discounted Price in Flipkart Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X