Home
Mobile

வெறும் ரூ.9999 க்கு கிடைக்கும் Moto G35 5G.. கண்ண மூடிக்கிட்டு வாங்கலாமா.. இல்ல வேண்டாமா?

இந்த 2024 ஆம் ஆண்டில், இந்தியாவில் பல வகையான பட்ஜெட்களில், பல எண்ணிக்கையிலான புதிய ஸ்மார்ட்போன்களின் அறிமுகத்தை நாம் கண்டோம். ஆனால் எந்தவொரு பிரிவை காட்டிலும் பட்ஜெட்-விலை பிரிவின் அறிமுகமான ஸ்மார்ட்போன்கள் தான் - குறிப்பாக 5ஜி ஆதரவுடன் அறிமுகமான மாடல்கள் தான் - இந்திய மொபைல் சந்தையில் சலசலப்புகளை உருவாக்கின.

அந்த வரிசையில் மோட்டோரோலா நிறுவனம் சமீபத்தில் மோட்டோ ஜி35 5ஜி (Moto G35 5G) என்கிற மாடலை அறிமுகம் செய்தது. இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.9,999 க்கு வாங்க கிடைக்கிறது. அதாவது ரூ.10,000 க்குள் என்கிற பிரிவில் 5ஜி ஆதரவுடன் இன்னொரு புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதை நம்பி வாங்கலாமா?

Moto G35 5G.. கண்ண மூடிக்கிட்டு வாங்கலாமா.. இல்ல வேண்டாமா?

நாங்கள் நாம் புதிதாக அறிமுகமான மோட்டோ ஜி35 5ஜி ஸ்மார்ட்போனை ரியல்மி நார்சோ 70எக்ஸ் 5ஜி, சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி, சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி ப்ரைம் எடிஷன், இன்பினிக்ஸ் நோட் 40எக்ஸ் ஆகிய (ஒரே மாதிரியான விலைப்பிரிவில் உள்ள மற்ற) ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பிட்டு பார்க்க உள்ளோம். அதன் வழியாக மோட்டோ ஜி35 5ஜி-ஐ வாங்கலாமா வேண்டாமா என்கிற முடிவுக்கு வரவுள்ளோம்.

ஒப்பீடு செய்வதற்கு முன்பாக நாம் சில நேரடியான குறையை பற்றி பேசிவிடலாம்.. சிப்செட் விஷயத்தில் மோட்டோ ஜி35 5ஜி பின்வாங்குகிறது. சர்வதேச பிளாக்கர்கள் இந்த ஸ்மார்ட்போன் கேமர்களுக்கு போதுமான செயல்திறனை வழங்கவில்லை என்று கூறுகின்றனர். சரி இப்போது ஒப்பீடுகளுக்கு வருவோம்.

Moto G35 5G.. கண்ண மூடிக்கிட்டு வாங்கலாமா.. இல்ல வேண்டாமா?

மோட்டோ ஜி35 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது FHD+, 120ஹெர்ட்ஸ், LCD டிஸ்பிளேவை கொண்டுள்ளது ஒரு நல்ல விஷயம் தான் ஆனால் இதை ஒரு சிறப்பம்சம் என்று எடுத்துக்கொள்ள முடியாது. ஏனென்றால், ஏனென்றால் மேலே குறிப்பிட்ட எல்லா மாடல்களுமே FHD+ மற்றும் 90 அல்லது 120ஹெர்ட்ஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளன. ஆனால் 2 சாம்சங் ஸ்மார்ட்போன்களுமே AMOLED டிஸ்பிளேவை பேக் செய்கின்றன.

மோட்டோ ஜி35 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 20W சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. இந்த பட்டியலில் இரண்டாவது ஸ்லோவான சார்ஜிங் ஸ்பீட் ஆகும். ரியல்மி 45W சார்ஜிங்கையும், சாம்சங் 25W சார்ஜிங்கையும், இன்பினிக்ஸ் 18W சார்ஜிங்கையும் ஆதரிக்கிறது. வெளிப்படையாகவே சார்ஜிங் விஷயத்தில் மோட்டோ ஜி35 5ஜி ஸ்மார்ட்போன் பின்வாங்குகிறது.

ஓஎஸ் அப்டேட்டை பொறுத்தவரை, மோட்டோ ஜி35 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஒரு ஓஎஸ் புதுப்பிப்பு, இரண்டு SMR அப்டேட்களை (அதாவது ஆண்ட்ராய்டு 15 வரையிலாக அப்டேட்டை) பெறும். ஆனால் ரியல்மியோ இரண்டு ஓஎஸ் அப்டேட்கள், மூன்று SMR அப்டேட்கள் என ஆண்ட்ராய்டு 16 வரை பெறும். இதில் வெற்றியாளர் சாம்சங் தான் - இது 4 ஓஎஸ் அப்டேட்கள், 4 SMR அப்டேட்களை பெறும்!

கேமராக்களை பொறுத்தவரை மோட்டோ ஜி35 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 50MP + 8MP என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. ரியல்மியும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான கேமரா (50MP + 2MP) செட்டப்பை கொண்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி மற்றும் சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி ப்ரைம் எடிஷன் ஆகிய இரண்டும் 50MP + 5MP + 2MP ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளன.

Moto G35 5G.. கண்ண மூடிக்கிட்டு வாங்கலாமா.. இல்ல வேண்டாமா?

மேலே உள்ள 2 படங்களில் வலது பக்கம் இருப்பது மோட்டோ ஜி35 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டு எடுத்தது. மறுப்பக்கம் இருப்பது சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி ப்ரைம் எடிஷன் கொண்டு எடுத்தது. இரண்டுமே நேரடி சூரிய ஒளியில்எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஆகும். வலது பக்கத்தில் இருப்பதை விட இடது பக்கத்தில் உள்ள எச்டிஆர் தரம் (சாம்சங்) நன்றாக இருப்பதை வெளிப்படையாகவே பார்க்க முடிகிறது.

ஆனால் இங்கே வெற்றியாளர் (மற்ற விஷயங்களில் பின்தங்கியுள்ள) இன்பினிக்ஸ் நோட் 40எக்ஸ் ஸ்மார்ட்போன் தான் இது 108MP + 2MP என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. சரி விலை விவரங்களுக்கு வருவோம். முன்னரே குறிப்பிட்டபடி மோட்டோ ஜி35 5ஜி ரூ.9,999 க்கு வாங்க கிடைக்கிறது.

Moto G35 5G.. கண்ண மூடிக்கிட்டு வாங்கலாமா.. இல்ல வேண்டாமா?

மறுகையில் உள்ள ரியல்மி நார்சோ 70எக்ஸ் 5ஜி ரூ.11,499 க்கும், சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி ரூ.11,900 க்கும், சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி ப்ரைம் எடிஷன் ரூ.11,999 க்கும், இன்பினிக்ஸ் நோட் 40எக்ஸ் ரூ.12,999 க்கும் வாங்க கிடைக்கிறது. மேற்கண்ட விலைகள் வெளியீட்டு விலைகள் ஆகும்; தற்போது இவைகள் சலுகைகளின் கீழ் இன்னும் மலிவான விலைக்கு கூட கிடைக்கலாம்.

சரி எதை வாங்கலாம்? இந்நேரம், புதிதாக அறிமுகமான மோட்டோ ஸ்மார்ட்போன் வேலைக்கு ஆகாது என்று உங்களுக்கே தெரிந்து இருக்கும். நீங்கள் சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி ப்ரைம் எடிஷன் ஸ்மார்ட்போனை கருத்தில் கொள்ளலாம். ஏனென்றால் இது ரூ.11,500 க்கு AMOLED டிஸ்பிளே, பாஸ்ட் வயர்டு சார்ஜிங், நான்கு ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் நான்கு SMR அப்டேட்களை வழங்குகிறது.

Moto G35 5G.. கண்ண மூடிக்கிட்டு வாங்கலாமா.. இல்ல வேண்டாமா?

கூடவே ஒப்பீட்டளவில் நல்ல கேமரா மற்றும் பெரிய 6000mAH பேட்டரியையும் கொண்டுள்ளது.இது BGMI போன்ற பிரபலமான கேம்களில் நல்ல செயல்திறனையும் வெளிப்படுத்துகிறது. மோட்டோ ஜி35 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ள யுனிசாக் சிப்செட்களில் பல பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளது. இதற்காகவே கூட நாம் சாம்சங் ஸ்மார்ட்போனை கருத்தில் கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Moto G35 5G Vs Samsung Galaxy M15 5G Prime Edition Which Smartphone is Better and Why
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X