அடுத்த வாரம் வரும் இந்த Moto 5ஜி போனுக்கு மொத்த இந்தியாவும் வெயிட்டிங்.. எந்த மாடல்? என்ன விலை?
அடுத்த வாரம் அதாவது டிசம்பர் 10-ம் தேதி மோட்டோ ஜி35 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது மோட்டோரோலா (motorola) நிறுவனம். ஏற்கனவே இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் வெளியான நிலையில் தற்போது விலை குறித்த தகவலும் வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை பார்க்கலாம்.
அதாவது ஆன்லைனில் கசிந்த தகவலின்படி, மோட்டோ ஜி35 5ஜி ஆனது இந்தியாவில் ரூ.10,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த கம்மி விலையில் அறிமுகமாகும் என்பதால் நல்ல வரவேற்பு இருக்கும். மேலும் இப்போது இந்த போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

மோட்டோ ஜி35 5ஜி அம்சங்கள் (Moto G35 5G specifications): சக்திவாய்ந்த யுனிசாக் டி760 (Unisoc T760) சிப்செட் உடன் இந்த மோட்டோ ஜி35 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல மேம்பட்ட கேமிங் அம்சங்களும் இந்த போனில் உள்ளன.
தரமான டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி35 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இந்த போனின் எடை 185 கிராம் ஆகும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது மோட்டோரோலா நிறுவனம்.
அதேபோல் 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே உடன் இந்த மோட்டோ ஜி35 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1000 நிட்ஸ் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன. எனவே இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
மோட்டோ ஜி35 5ஜி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதள வசதியுடன் வெளிவரும். குறிப்பாக IP52 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust And Splash Resistant) உடன் இந்த போன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆன்லைனில் வெளியான தகவலின்படி, 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் மோட்டோ ஜி35 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

இந்த மோட்டோ ஜி35 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது . மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.
5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி35 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 20W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. குறிப்பாக இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். அதேபோல் இந்த போனில் பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் கம்மி விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
photo credit: moto, fonearena


Click it and Unblock the Notifications








