Home
Mobile

ஸ்கெட்ச் போட்டு தூக்கிடுங்க.. ரூ.10,000 விலையா? 120Hz டிஸ்பிளேவா? பாஸ்ட்டான 5G மொபைல்.. தேதியை நோட் பண்ணுங்க..

மோட்டோரோலா (Motorola) நிறுவனம் அதன் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் சாதனமான மோட்டோ ஜி35 5ஜி (Moto G35 5G) மாடல் ஸ்மார்ட்போன் சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளதை இன்று உறுதிப்படுத்தியுள்ளது. இந்த புதிய மோட்டோ G35 5ஜி (Moto G35 5G) சாதனம் இந்தியாவில் பிளிப்கார்ட் (Flipkart) வழியாக பிரத்தியேகமாக அறிமுகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போனில் 6.7" இன்ச் பெரிய 120Hz ரெஃப்ரஷ் ரேட் டிஸ்பிளே, 128GB ஸ்டோரேஜ் சக்தி வாய்ந்த சிப்செட், 5000mAh பேட்டரி போன்றவற்றை எதிர்பார்க்கலாம்.

Moto G35 5G ஸ்மார்ட்போன் சாதனம் கடந்த ஆகஸ்ட் மாதம் உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, இந்த புதிய மோட்டோ G35 5ஜி (Moto G35 5G) ஸ்மார்ட்போன் மாடலை மோட்டோரோலா நிறுவனம் வரும் டிசம்பர் 10, 2024 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த புதிய போனின் வருகையை உறுதிப்படுத்தும் விதமாக பிளிப்கார்ட் தளத்தில் ஒரு மைக்ரோசைட் உருவாக்கப்பட்டுள்ளது.

ஸ்கெட்ச் போட்டு தூக்கிடுங்க.. ரூ.10,000 விலையா? 120Hz டிஸ்பிளேவா?

ஸ்கெட்ச் போட்டு தூக்கிடுங்க.. Moto G35 5G வெறும் ரூ.10,000 விலையா?

இதில் மோட்டோ G35 5ஜி (Moto G35 5G) ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. மோட்டோ G35 5ஜி (Moto G35 5G) போனின் சிறப்பம்சங்கள் பற்றி பேசுகையில், இந்த சாதனம் 6.7" இன்ச் அளவு கொண்ட FHD+ டிஸ்பிளேவை (display) கொண்டுள்ளது. இது 60Hz முதல் 120Hz வரையிலான ரெஃப்ரஷ் ரேட்டை (refresh rate) ஆதரிக்கும் அம்சத்தை கொண்டுள்ளது.

இது 1000 நீட்ஸ் பீக் பிரைட்னஸ் (peak brightness) உடன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் (Corning Gorilla Glass 3) வருகிறது. உலக சந்தையில் இந்த மோட்டோ மொபைல் (Moto mobile) சாதனம் UNISOC T760 SoC சிப்செட் உடன் வெளிவந்தது. ஆனால், இந்தியாவில் இந்த போன் Snapdragon 695 SoC சிப்செட் உடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

பட்ஜெட்டில் பாஸ்ட்டான 5G மொபைல்:
இது பாஸ்டஸ்ட் 5ஜி சிப்செட்டாக இந்த செக்மென்ட்டில் வருகிறது. இந்த Moto G35 5G ஸ்மார்ட்போன் சாதனம் 4GB ரேம் (RAM) உடன் 128GB ஸ்டோரேஜ் (storage) ஆதரவை கொண்டுள்ளது. இதில் 8GB எக்ஸ்டன்டட் ரேம் (extended RAM) ஆதரவும் உள்ளது. Moto G35 5G ஸ்மார்ட்போனில் 50MP + 8MP டூயல் கேமரா (camera) 4K ரெக்கார்டிங் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில், 16MP செல்பி கேமரா கிடைக்கிறது.

மோட்டோ G35 5ஜி (Moto G35 5G) ஸ்மார்ட்போன் சாதனம் 5000mAh பேட்டரி உடன் 20W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவை இதில் எதிர்பார்க்கலாம். இந்த ஸ்மார்ட்போன் 4X4 MIMO, VoNR, 12 வகையான 5ஜி பேண்ட் சப்போர்ட் ஆதரவு போன்றவற்றை கொண்டுள்ளது. இது IP52 ரேட்டிங் உடன் வாட்டர் டச் தொழில்நுட்பத்தை (water touch technology) கொண்டுள்ளது.

Moto G35 5G விலை என்ன?

ஆடியோவை பொறுத்த வரை, இந்த போன் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ் (dual stereo speakers) உடன் டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவை வழங்குகிறது. இந்தியாவில் இந்த புதிய மோட்டோ G35 5ஜி (Moto G35 5G) சாதனம் ரூ. 10,000 விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட மாடல் விலை ரூ.15,000 விலையில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இது இந்தியாவில் என்ன விலையில் வருமென்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Moto G35 5G Launching In India On December 10 2024 with 120Hz Display Expecting Price Rs 10000
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X