Home
Mobile

ரூ.9999 போதும்.. 50எம்பி கேமரா.. 5000mAh பேட்டரி.. அறிமுகமானது புதிய மோட்டோ 5ஜி போன்.. எந்த மாடல்?

மோட்டோ ஜி35 5ஜி (Moto G35 5G) ஸ்மார்ட்போனை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது மோட்டோரோலா (Motorola) நிறுவனம். தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த போனின் விலை, அம்சங்கள், விற்பனை விவரம் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

மோட்டோ ஜி35 5ஜி அம்சங்கள் (Moto G35 5G specifications): 6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே உடன் இந்த மோட்டோ ஜி35 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1000 நிட்ஸ் பிரைட்னஸ், எச்டிஆர் 10, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன.

அறிமுகமானது புதிய மோட்டோ 5ஜி போன்.. எந்த மாடல்?

தரமான யுனிசாக் டி760 (Unisoc T760) சிப்செட் உடன் இந்த மோட்டோ ஜி35 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். மேலும் ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதள வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

மோட்டோ ஜி35 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போனின் ரியர் கேமரா ஆதரவுடன் 4கே வீடியோக்களை பதிவு செய்ய முடியும்.

குறிப்பாக IP52 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust And Splash Resistant) உடன் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி35 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். பின்பு சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor) கொண்டுள்ளது இந்த போன்.

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் இந்த மோட்டோ ஜி35 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது மோட்டோரோலா நிறுவனம்.

அறிமுகமானது புதிய மோட்டோ 5ஜி போன்.. எந்த மாடல்?

5000mAh பேட்டரி உடன் இந்த மோட்டோ ஜி35 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 20W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. குறிப்பாக இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். அதேபோல் 5ஜி, டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத் 5.0, ஜிபிஎஸ்,குளோனாஸ் (GLONASS), கலிலியோ (GALILEO), 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. மேலும் இந்த போனின் எடை 185 கிராம் ஆகும்.

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட மோட்டோ ஜி35 5ஜி போனின் விலை ரூ.9,999-ஆக உள்ளது. வரும் டிசம்பர் 16-ம் தேதி பிளிப்கார்ட் தளத்தில் இந்த போனை வாங்க முடியும். லீஃப் கிரீன் (Leaf Green), குவாவா ரெட் (Guava Red), மிட்நைட் பிளாக் (Midnight Black) நிறங்களில் இந்த போன் விற்பனைக்கு வரும். அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Moto G35 5G launched in India: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X