Home
Mobile

டிசம்பர் 10 வரை எந்த போனும் வாங்காதீங்க.. 50MP கேமரா.. டால்பி அட்மாஸ்.. வருகிறது Moto 5ஜி போன்.. எந்த மாடல்?

மோட்டோரோலா (motorola) நிறுவனம் தனது புதிய மோட்டோ ஜி35 5ஜி (Moto G35 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த போன் டிசம்பர் 10-ம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மோட்டோ ஜி35 5ஜி விவரக்குறிப்புகள் ஆன்லைனில் வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

மோட்டோ ஜி35 5ஜி அம்சங்கள் (Moto G35 5G specifications): 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே உடன் இந்த மோட்டோ ஜி35 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1000 நிட்ஸ் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன.

டிசம்பர் 10 வரை எந்த போனும் வாங்காதீங்க..வருகிறது Moto 5ஜி போன்..

யுனிசாக் டி760 (Unisoc T760) சிப்செட் உடன் இந்த மோட்டோ ஜி35 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல மேம்பட்ட கேமிங் அம்சங்களும் இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே கேமிங் பயனர்கள் இந்த மோட்டோ போனை நம்பி வாங்கலாம்.

4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் மோட்டோ ஜி35 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதள வசதியுடன் மோட்டோ ஜி35 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த போனுக்கு இரண்டு வருடங்களுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக IP52 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust And Splash Resistant) உடன் இந்த போன் வெளிவரும்.

டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி35 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். மேலும் இந்த போனின் எடை 185 கிராம் ஆகும்.

50எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி35 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போனின் உதவியுடன் 4கே வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

டிசம்பர் 10 வரை எந்த போனும் வாங்காதீங்க..வருகிறது Moto 5ஜி போன்..

5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான மோட்டோ ஜி35 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 20W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. குறிப்பாக இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். அதேபோல் இந்த போனில் பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் உள்ளன.

ஆன்லைனில் வெளியான தகவலின்படி கம்மி பட்ஜெட்டில் இந்த புதிய மோட்டோ ஜி35 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போன் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும். குறிப்பாக அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும் என்பதால் நல்ல வரவேற்பு இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Moto G35 5G India launch date announced: check specifications and availability
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X