வெச்சி செஞ்சிட்டாங்க.. பட்ஜெட்ல 50MP கேமரா.. 16GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
மார்கெட் அதிரும் கம்மி பட்ஜெட்டில் ஃபுல்எச்டிபிளஸ் டிஸ்பிளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 புரொடெக்சன், ஆட்டோ போகஸ் சப்போர்ட் கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ், 18W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி, 1 டிபி மெமரி போன்ற பீச்சர்களுடன் மோட்டோ ஜி35 5ஜி (Moto G35 5G) களமிறங்கி இருக்கிறது. இந்த மோட்டோ ஜி35 போனின் முழு பீச்சர்கள் எப்படி? விலை மற்றும் விற்பனை விவரங்கள் என்ன? இதோ விவரங்கள்.
மோட்டோ ஜி35 5ஜி அம்சங்கள் (Moto G35 5G Specifications): இந்த மோட்டோ போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்ட ஆக்டா கோர் யுனிசோக் டி760 6என்எம் (Octa Core UNISOC T760 6nm) சிப்செட் மற்றும் பட்ஜெட் கேமிங் அவுட்புட் கொடுக்கும் மாலி ஜி57 எம்சி4 ஜிபியு (Mali G57 MC4 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) புரொடெக்சன் கொண்ட 6.72 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் வருகிறது. எச்டிஆர்10 (HDR10) மற்றும் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.
240Hz டச் சாம்பிளிங் ரேட் உள்ளது. இந்த மோட்டோ ஜி35 5ஜி போனில் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் வெளியாகி இருக்கின்றன. இதுபோக 8 ஜிபிக்கான ரேம் பூஸ்ட் (RAM Boost) மற்றும் 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) வருகிறது.
மேலும், டூயல் சிம் சிலாட் (Dual SIM Slot) கொண்டிருக்கிறது. பட்ஜெட் மோட்டோ போன்களில் வரும் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. ஆகவே, 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா வருகிறது. 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. ஃபுல்எச்டி வீடியோ ரெக்கார்டிங் வருகிறது.

மோட்டோவின் குவாட் பிக்சல் டெக்னாலஜி (Quad Pixel Technology) கிடைக்கிறது. ஆட்டோ போகஸ் (Auto Focus) சப்போர்ட் உள்ளது. வாட்டர் ரெப்பில்லென்ட் (Water Repellant) டிசைன் கொண்டிருக்கிறது. டைப்-சி போர்ட் (Type-C Port), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) வருகிறது.
இந்த மோட்டோ ஜி35 5ஜி போனில் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி வருகிறது. பக்கா ஸ்லிம் லுக்கில் 7.79 மிமீ தடிமன் மட்டுமே வருகிறது. வேகன் லெதர் பேக் மாடல் 191 கிராம் எடையும், சிலிகான் பேக் மாடல் 188 கிராம் எடையும் கொண்டிருக்கிறது. 5ஜி கனெக்டிவிட்டி உள்ளது. சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் வருகிறது.
நான்கு கலர்களில் கிடைக்க இருக்கிறது. ஆகவே, லீஃப் கிரீன் (Leaf Green), குவாவா ரெட் (Guava Red), மிட்நைட் பிளாக் (Midnight Black) மற்றும் சேஜ் கிரீன் (Sage Green) ஆகிய கலர்களில் வெளியாகி இருக்கிறது. இந்த போனின் விலை ரூ.18,490ஆக இருக்கிறது. முதலில் ஐரோப்பிய நாடுகளில் வெளியாகி இருக்கிறது. அடுத்த சில வாரங்களில் இந்தியாவில் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








