Home
Mobile

ஆர்டர் பிச்சிக்கும்.. வெறும் ரூ.9,999 போதும்.. QUAD கேமரா.. 20W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

மோட்டோ பிரியர்களை மரண வெயிட்டிங் மோடில் போடும்படி மோட்டோ ஜி34 5ஜி (Moto G34 5G) போன் மலிவான பட்ஜெட்டில் 16ஜிபி ரேம், குவாட் டெக்னாலஜி கேமரா, 20W டர்போபவர் சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற அம்சங்களுடன் விற்பனைக்கு வர இருக்கிறது.

மோட்டோ ஜி34 5ஜி அம்சங்கள் (Moto G34 5G Specifications): இந்த மோட்டோ போனில் 6.5 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எச்டிபிளஸ் (HD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 269 பிபிஐ சப்போர்ட் வருகிறது.

ரூ.9,999 போதும்.. QUAD கேமரா.. 20W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி போன்!

இந்த மோட்டோவில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 695 5ஜி எஸ்ஓசி மொபைல் (Octa-core Snapdragon 695 5G SoC Mobile) சிப்செட் வருகிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) சப்போர்ட் கொண்டுள்ளது. அதோடு கேமிங் பிரியர்கள் விரும்பும் அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

இந்த மோட்டோ ஜி34 5ஜி போனில் 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி மேக்ரோ (Macro) கேமரா வருகிறது. இந்த கேமராவில் குவாட் பிக்சல் டெக்னாலஜி (Quad Pixel Technology) டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளது. புல்எச்டி (FHD) வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொண்டுள்ளது.

அதோடு அல்ட்ரா-ரெஸ் (Ultra-Res), டூயல் கேப்ச்சர் (Dual Capture), நைட் விஷன் (Night Vision), மேக்ரோ விஷன் (Macro Vision), போர்ட்ராய்டு (Portrait), ப்ரோ மோட் (Pro Mode) போன்ற பீச்சர்கள் வருகின்றன. அதுமட்டுமல்லாமல், கூகுள் ஆட்டோ என்ஹான்ஸ் (Google Auto Enhance) டெக் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோல 16 எம்பி அல்ட்ரா பிக்சல் செல்பீ கேமரா வருகிறது. இந்த கேமராவில் ஆட்டோ எச்டிஆர் (Auto HDR), ப்ரோ மோட், பேஸ் ரீடச் (Face Retouch), ஆக்டிவ் போட்டோஸ் (Active Photos) போன்ற பீச்சர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த மோட்டோவில் 5000mAh பேட்டரி வருகிறது.

ரூ.9,999 போதும்.. QUAD கேமரா.. 20W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி போன்!

இந்த பேட்டரிக்கு 20W டர்போபவர் (TurboPower) ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு டைப்-சி (Type-C) சார்ஜிங் சப்போர்ட் வருகிறது. இந்த போனில் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன.

அதோடு 8 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) சப்போர்ட் கொண்டிருக்கிறது. அதேபோல டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) சப்போர்ட் கொண்ட ஸ்ட்ரீயோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) வருகின்றன. சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Facing Fingerprint Sensor) வருகிறது.

அதேபோல பேஸ் அன்லாக் (Face Unlock) சப்போர்ட் கொண்டிருக்கிறது. 3.5 மிமீ ஹெட்செட் ஜாக் (Headset Jack) வருகிறது. IP52 தர வாட்டர் ரெபெல்லெண்ட் சப்போர்ட் வருகிறது. இந்த போனில் எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி (Dual 4G), ப்ளூடூத் 5.1 (Bluetooth 5.1), வை-பை 802 (Wi-Fi 802) போன்ற கனெக்டிவிட்டிகள் வருகின்றன.

அதேபோல ஜிபிஎஸ் (GPS) சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த போனில் மேட் (Matte) பேனல் கொண்ட ஐஸ் ப்ளூ (Ice Blue), சார்கோல் பிளாக் (Charcoal Black) கலர்கள் வருகின்றன. அதோடு வேகன் லெதர் (Vegan Leather) பேக் பேனல் கொண்ட ஓசன் கீரின் (Ocean Green) கலர் விற்பனைக்கு வர இருக்கிறது. இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் ஜனவரி 17ஆம் தேதி முதல் ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த போனின் ஆரம்ப விலை ரூ.9,999ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் ரூ.1000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் அடங்கும். இதன் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.10,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.11,999ஆகவும் இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Moto G34 5G With Snapdragon 695 Sale From January 17 in Flipkart India Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X