Home
Mobile

ஜன.9 காலி.. ரூ.10,000 பட்ஜெட்ல வேகன் லெதர் பேனல்.. 50MP குவாட் கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டின் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் பிரியர்களை தட்டித்தூக்கும் விதமாக மோட்டோ ஜி34 5ஜி (Moto G34 5G) ரூ.10,000 பட்ஜெட்டில் வெளியாக இருக்கிறது. இந்த புதிய மோட்டோ போனின் வெளியீட்டு தேதி மற்றும் அம்சங்கள் குறித்த முழு விவரம் இதோ.

மோட்டோ ஜி34 5ஜி அம்சங்கள் (Moto G34 5G Specifications): இந்த மோட்டோ போன் சூப்பர் ப்ரீமியம் டிசைனில் மேட் (Matte) மற்றும் வேகன் லெதர் (Vegan Leather) பேக் பேனல் ஆப்ஷனில் வர இருக்கிறது. ஆகவே, மேட் பேனில் ஐஸ் ப்ளூ (Ice Blue), சார்கோல் பிளாக் (Charcoal Black) கலர்கள் வருகின்றன.

ரூ.10,000 பட்ஜெட்ல வேகன் லெதர் பேனல்.. 50MP குவாட் கேமரா போன்!

அதேபோல வேகன் லெதர் (Vegan Leather) பேக் பேனலில் ஓசன் கீரின் (Ocean Green) கலர் விற்பனைக்கு வர இருக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.5 இன்ச் எச்டிபிளஸ் (HD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொண்ட ஸ்ட்ரீயோ ஸ்பீக்கர்கள் வருகின்றன.

அதோடு ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) சப்போர்ட் வருகிறது. இந்த மோட்டோ ஜி34 4ஜி போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 695 5ஜி எஸ்ஓசி (Octa-core Snapdragon 695 5G SoC) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த போனில் 50 எம்பி குவாட் பிக்சல் கேமரா சிஸ்டம் (Quad Pixel Camera System) வருகிறது. அதோடு 2 எம்பி மேக்ரோ விஷன் (Macro Vision) கேமரா வருகிறது. இந்த கேமராவில் கூகுள் ஆட்டோ என்ஹான்ஸ் (Google Auto Enhance) சப்போர்ட் வருகிறது. அதேபோல 16 எம்பி செல்பீ கேமரா கொண்டிருக்கிறது.

ரூ.10,000 பட்ஜெட்ல வேகன் லெதர் பேனல்.. 50MP குவாட் கேமரா போன்!

இந்த மோட்டோவில் 20W டர்போபவர் (TurboPower) சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. டைப்-சி (Type-C) சார்ஜிங் கொண்டுள்ளது. இந்த போனில் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் இருக்கிறது.

இந்த 8 ஜிபி ரேம் வேரியண்ட்டில் கூடுதலாக 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் மற்றும் 4 ஜிபி ரேம் வேரியண்ட்டில் கூடுதலாக 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. பேஸ் அன்லாக் (Face Unlock) மற்றும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Facing Fingerprint Sensor) வருகிறது.

இந்த மோட்டோ ஜி34 5ஜி போனில் 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி (Dual 4G) கனெக்டிவிட்டி வருகிறது. IP52 தர ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் வருகிறது. 3.5 மிமீ ஆடியோ ஜாக் (Audio Jack) கொண்டிருக்கிறது. இந்த அம்சங்களை மட்டுமே மோட்டோ இந்தியா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.

இந்த மோட்டோ போன் வரும் ஜனவரி 9ஆம் தேதி இந்தியாவில் வெளியாகிறது. பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த போனின் விலை விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. இருப்பினும், இதன் 4ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.10,999ஆக இருக்கும் என்று மார்கெட் வட்டாரங்களில் தகவல் கசிந்துள்ளது.

ஆகவே, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.12,000 பட்ஜெட்டில் இருக்க வாய்ப்புள்ளது. ரூ.10,000 பட்ஜெட்டில் பிரீமியம் டிசைன் 5ஜி சிப்செட், பக்கா ரேம், ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட பேட்டரி போன் வேண்டுமானால், இந்த மோட்டோ ஜி34 போனை ஆப்ஷனில் எடுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Moto G34 5G With Snapdragon 695 Price Tipped Ahead January 9 Launch in India Check Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X