Home
Mobile

ஆர்டர் மிரளும்.. வெறும் ரூ.11,950 போதும்.. QUAD டிஸ்பிளே.. 16GB ரேம்.. 1TB மெமரி.. எந்த மாடல்?

மேட்டோ (Moto) பிரியர்கள் அறக்க பறக்கும் விதமாக 16 ஜிபி ரேம், குவாட் கேமரா, டர்போ சார்ஜிங், வேகன் லெதர் பேனல் போன்ற பட்டையை கிளப்பும் அம்சங்களை கொண்ட மோட்டோ ஜி34 5ஜி (Moto G34 5G) பட்ஜெட்டில் வெளியாக இருக்கிறது.

இந்த போன் வரும் ஜனவரி 9ஆம் தேதி இந்தியாவில் வெளியாகிறது. இதனால், அந்த போனின் அம்சங்கள் வரிசையாக வெளியாகி மோட்டோ பிரியர்கள் மட்டுமல்லாமல், பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் பிரியர்களையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது. இந்த அம்சங்களை இப்போது பார்ப்போம்.

ரூ.11,950 போதும்.. QUAD டிஸ்பிளே.. 16GB ரேம்.. 1TB மெமரி.. எந்த மாடல்?

மோட்டோ ஜி34 5ஜி அம்சங்கள் (Moto G34 5G Specifications): இந்த மோட்டோ போனில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 695 5ஜி எஸ்ஓசி (Octa-core Snapdragon 695 5G SoC) சிப்செட் வருகிறது. அதோடு ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) சப்போர்ட் வருகிறது.

இந்த போனில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.5 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD)டிஸ்பிளே வருகிறது. இதுவொரு எச்டிபிளஸ் (HD+) பன்ஞ் ஹோல் டிஸ்பிளே (Punch-hole Display) மாடலாகும். 8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) சப்போர்ட் கொண்டிருக்கிறது.

ஆகவே, 16 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வர இருக்கிறது. அதோடு 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டும் வருகிறது. மேலும், 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட வாய்ப்புள்ளது.

இந்த மோட்டோவில் 50 எம்பி குவாட் பிக்சல் மெயின் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா செட்டப் (Dual Rear Camera Setup) வருகிறது. அதேபோல 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த மெயின் கேமராவில் ஆட்டோ நைட் விஷன் (Auto Night Vision) பீச்சர் வருகிறது.

ரூ.11,950 போதும்.. QUAD டிஸ்பிளே.. 16GB ரேம்.. 1TB மெமரி.. எந்த மாடல்?

டால்பி அட்மோஸ் (Dolby Atmos), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் 3.5 மிமீ ஹெட்போன் ஜாக் (headphone Jack) வருகின்றன. IP52 தர டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் கொண்டிருக்கிறது. சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Facing Fingerprint Sensor) வருகிறது.

இந்த மோட்டோவில் டர்போ ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5,000mAh பேட்டரி வருகிறது. இதற்கு டைப்-சி (Type-C) சார்ஜிங் வருகிறது. இந்த போனில் கிளாஸ் பேனல் கொண்ட ஐஸ் ப்ளூ (Ice Blue), சார்கோல் பிளாக் (Charcoal Black) கலர்கள் வருகின்றன.

அதேபோல வேகன் லெதர் (Vegan Leather) பேக் பேனல் கொண்ட ஓசன் கீரின் (Ocean Green) கலரும் வர இருக்கிறது. இந்த போன் 5ஜி மாடலாகும். ஆகவே, 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி (Dual 4G) கனெக்டிவிட்டி வருகிறது. இந்த அம்சங்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளன.

இந்த போனின் விலை விவரங்கள் வெளியாகவில்லை. இருப்பினும், இந்த மோட்டோ ஜி34 5ஜி போன் சீனாவில் முன்னதாகவே வெளியாகிவிட்டதால், அங்கு நிர்ணயம் செய்யப்பட்ட விலையிலேயே இங்கும் வெளியாகும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சீனாவில் இந்த மோட்டோ போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.11,950ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆகவே, இதே விலையில் இங்கும் எதிர்பார்க்கலாம். பட்ஜெட்டில் 16 ஜிபி ரேம், 5ஜி சிப்செட், டர்போ சார்ஜிங் கொண்ட பேட்டரி போன் வேண்டுமானால், இந்த மாடலை ஆர்டர் செய்யுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Moto G34 5G With Snapdragon 695, 16GB RAM Launch on January 9 in India Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X