வெளுத்து கட்டுது விற்பனை.. வெறும் ரூ.9999 போதும்.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. 20W சார்ஜிங்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) ஆர்டருக்கு மேல் ஆர்டர் குவியும்படியான டிஸ்கவுண்ட் மலிவான பட்ஜெட்டில் பிரீமியம் லுக்குடன் வெளியான மோட்டோ ஜி34 5ஜி (Moto G34 5G) போனுக்கு கிடைக்கிறது. குவாட் பிக்சல் டெக்னாலஜி கொண்ட 50 எம்பி கேமரா, 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட எச்டிபிளஸ் டிஸ்பிளே, 20W சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி போன்ற பீச்சர்களில் பின்னி எடுக்கும் இந்த மோட்டோ ஜி34 5ஜி போனுக்கு எவ்வளவு தள்ளுபடி கிடைக்கிறது? முழு விவரங்கள் இதோ.
ரூ.10000 பட்ஜெட்டுக்குள் பக்கா 5ஜி போன் தேடிக்கொண்டிருக்கும் கஸ்டமர்களுக்கு கேமரா, சிப்செட் மற்றும் பேட்டரி போன்ற முக்கிய பீச்சர்களில் பட்டையை கிளப்பும் இந்த மோட்டோ ஜி34 5ஜி மாடல் நல்ல ஆப்ஷனாக இருக்கும். IP52 வாட்டர் ரெபெல்லெண்ட், ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் போன்ற பட்ஜெட்டைவிட கூடுதல் பீச்சர்களும் இதில் வருகின்றன.

மோட்டோ ஜி34 5ஜி அம்சங்கள் (Moto G34 5G Specifications): இந்த போனில் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கொண்ட 6.5 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எல்சிடி டிஸ்பிளே (LCD Display) வருகிறது. இந்த டிஸ்பிளேவில் மிட்-ரேஞ்ச் போன்களுக்கு நிகராக 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. மேலும், 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டிருக்கிறது.
இந்த போனில் 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. மெயின் கேமராவில் குவாட் பிக்சல் டெக்னாலஜி (Quad Pixel Technology) மற்றும் பிடிஏஎப் (PDAF) சப்போர்ட் வருகிறது. 16 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது.
இந்த செல்பீ ஷூட்டர் மற்றும் மெயின் கேமராவில் புல்எச்டியில் (FHD) வீடியோ ரெக்கார்டிங் செய்து கொள்ளலாம். இந்த பட்ஜெட்டிலும் நைட் விஷன். மேக்ரோ விஷன், போர்ட்ராய்டு, லைவ் ஃபில்டர்கள், டூயல் கேப்ச்சர், ஆடியோ ஜூம் மற்றும் வீடியோ ஸ்டெபிளைசேஷன் போன்ற கேமரா பீச்சர்களை கொண்டிருக்கிறது.

இந்த மோட்டோ ஜி34 5ஜி போனில் 20W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் டைப்-சி போர்ட் (Type-C Port) கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 5ஜி எஸ்ஓசி ( Qualcomm Snapdragon 695 6nm 5G SoC) உடன் அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்டிருக்கிறது.
4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் கிடைக்கிறது. 4ஜி மாடலில் 4 ஜிபி டைனாமிக் ரேம் மற்றும் 8 ஜிபி மாடலில் 8 ஜிபி டைனாமிக் ரேம் வருகிறது. IP52 வாட்டர் ரெபெல்லெண்ட், டால்பி அட்மோஸ் (Dolby Atmos), ஸ்ட்ரீயோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) வருகின்றன.
ஹை-ரெஸ் ஆடியோ, சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், 3.5 மிமீ ஹெட்போன் ஜாக் மற்றும் டூயல் நானோ சிம் சிலாட் வருகிறது. இந்த போனின் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.10,999ஆக இருக்கிறது. ஆனால், பிளிப்கார்ட் தளத்தில் ரூ.1000 டிஸ்கவுண்ட் உடன் விற்பனையாகிறது.
ஆகவே, இந்த மோட்டோ ஜி34 5ஜி போனை வெறும் ரூ.9999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். இந்த டிஸ்கவுண்ட் மல்டிபிள் பேங்க் கிரெடிட் கார்டுகளுக்கு கொடுக்கப்படுகிறது. இந்த போனை ஐஸ் ப்ளூ (Ice Blue), சார்கோல் பிளாக் (Charcoal Black), லெதர் பேனல் கொண்ட ஓசன் கீரின் (Ocean Green) கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளாம்.


Click it and Unblock the Notifications








