மிரளுது பட்ஜெட்.. வெறும் ரூ.11,950 போதும்.. OLED டிஸ்பிளே.. 16GB ரேம்.. 1TB மெமரி.. எந்த மாடல்?
இந்திய மோட்டோ பிரியர்களை வெயிட்டிங் மோடில் போடும்படியான பட்ஜெட்டில் ஓஎல்இடி டிஸ்பிளே, 16ஜிபி ரேம், 1டிபி மெமரி சப்போர்ட், 50 எம்பி கேமரா போன்ற பட்டையை கிளப்பும் அம்சங்களுடன் மோட்டோ ஜி34 5ஜி (Moto G34 5G) போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மோட்டோ ஜி34 5ஜி அம்சங்கள் (Moto G34 5G Specifications): இந்த மோட்டோ போனில் 6.5 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட எச்டிபிளஸ் (HD+) டிஸ்பிளேவாகும். பன்ஞ் ஹோல் டிசைன் (Punch-hole Design) கொண்டிருக்கிறது.

இந்த மோட்டோவில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 695 5ஜி எஸ்ஓசி (Octa-core Snapdragon 695 5G SoC) சிப்செட் வருகிறது. அதோடு எம்ஓய்யுஐ 6.0 (MYUI 6.0) சப்போர்ட் வருகிறது. இந்த போனில் 8 ஜிபி ரேம் + 8 ஜிபி டைனாமிக் ரேம் (Dynamic RAM) சப்போர்ட் வருகிறது.
அதோடு 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வர இருக்கிறது. அதேபோல 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மற்றொரு வேரியண்ட்டும் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த மோட்டோ ஜி34 5ஜி போனில் டூயல் ரியர் கேமரா செட்டப் (Dual Rear Camera Setup) வருகிறது. ஆகவே, 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி மேக்ரோ லென்ஸ் கேமரா கொண்டுள்ளது. அதோடு எல்இடி ஃபிளாஷ் (LED Flash) இடம் பெற்றுள்ளது. 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது.

இந்த போனில் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5,000mAh பேட்டரி வருகிறது. இதற்கு யுஎஸ்பி டைப்-சி (USB Type-C) சார்ஜிங் வருகிறது. இந்த பேட்டரியோடு 179 கிராம் எடை கொண்டிருக்கிறது. அதேபோல 7.99 மிமீ தடிமன் கொண்டுள்ளது. ஆகவே, ஸ்லிம் டிசைனில் போனை எதிர்பார்க்கலாம்.
இந்த மோட்டோ ஜி34 5ஜி வேரியண்ட்டில் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொண்ட டூயல் ஸ்பீக்கர்கள் (Dual Speaker) கொடுக்கப்பட்டுள்ளன. அதேபோல சைடு பேஸிங் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Facing Fingerprint Sensor), 3.5 மிமீ இயர்போன் ஜாக் (Earphone Jack) வருகிறது.
மேலும், டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) மற்றும் மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) இடம் பெற்றுள்ளது. இதுவொரு 5ஜி வேரியண்ட் என்பதால், 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA) மற்றும் டூயல் 4ஜி (Dual 4G) கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது.

அதோடு ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3), வை-பை 802 (Wi-Fi 802) மற்றும் ஜிபிஎஸ் (GPS) ஆகியவை வருகிறது. இந்த மோட்டோ ஜி34 5ஜி போனானது, ஸ்டார் பிளாக் (Star Black) மற்றும் சீ ப்ளூ (Sea Blue) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வர இருக்கிறது.
இந்த போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவ்வளவு அம்சங்களை கொண்டிருந்தும் இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.11,950 ஆக மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் விற்பனை தேதி வெளியாகவில்லை. இருப்பினும், ஒரு சில நாட்களில் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








