Home
Mobile

அவசரப்பட்டு எந்த போனும் வாங்காதீங்க.. 50MP கேமரா.. ஜன.9-ல் அறிமுகமாகும் Moto 5ஜி போன்.. எந்த மாடல்?

சீனாவில் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட் மோட்டோ ஜி34 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது மோட்டோரோலா நிறுவனம். அதாவது அதாவது மோட்டோ ஜி34 5ஜி ஸ்மார்ட்போன் வரும் ஜனவரி 9-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக இந்த போன் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

அதேபோல் மோட்டோ ஜி34 5ஜி ஆனது ஃப்ளிப்கார்ட் மைக்ரோசைட்-இல் காணப்பட்டுள்ளது. மேலும் பெரிய டிஸ்பிளே, தரமான சிப்செட், ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்த போன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும் ஆன்லைனில் வெளியான இந்த போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

50MP கேமரா.. ஜன.9-ல் அறிமுகமாகும் Moto 5ஜி போன்.. எந்த மாடல்?

மோட்டோ ஜி34 5ஜி அம்சங்கள் (Moto G34 5G specifications): சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 5ஜி எஸ்ஓசி (Qualcomm Snapdragon 695 5G SoC) சிப்செட் வசதியுடன் இந்த மோட்டோ ஜி34 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவுக்கு வரும். ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மூலம் இந்த போன் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட் என்பது குறிப்பிடத்தக்கது.

6.5-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளேவைக் கொண்டு இந்த மோட்டோ ஜி34 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும். பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 600 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக பன்ஞ் ஹோல் டிசைன் (Punch-hole Design) இந்த ஸ்மார்ட்போன் மாடல். பெரிய டிஸ்பிளே என்பதால் இந்த போனை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

குறிப்பாக 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் இந்த மோட்டோ ஜி34 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது. இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் அமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது மோட்டோரோலா நிறுவனம்.

இந்த மோட்டோ ஜி34 5ஜி ஸ்மார்ட்போன் 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி மேக்ரோ லென்ஸ் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் வெளிவரும. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன்அட்டகாசமான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

இந்த ஸ்மார்ட்போனில் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொண்ட டூயல் ஸ்பீக்கர்கள் (Dual Speaker) கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் சைடு பேஸிங் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Facing Fingerprint Sensor) கொண்டுள்ளது இந்த மோட்டோ ஸ்மார்ட்போன். அதேபோல் ஸ்டார் பிளாக் (Star Black) மற்றும் சீ ப்ளூ (Sea Blue) ஆகிய 2 கலர்களில் இந்த போன் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

50MP கேமரா.. ஜன.9-ல் அறிமுகமாகும் Moto 5ஜி போன்.. எந்த மாடல்?

18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி34 5ஜி ஸ்மார்ட்போன். பின்பு 5ஜி, 3.5 மிமீ இயர்போன் ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட், புளூடூத் 5.3, வை-பை 802, ஜிபிஎஸ், உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன.

குறிப்பாக மோட்டோ ஜி34 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் ரூ.11,990 விலையில் அறிமுகம் செய்யப்படும் என்ற தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து சிறப்பு அம்சங்களுடன் இந்த போன் வெளிவருவதால் நல்ல வரவேற்பு இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Moto G34 5G to launch on January 9: Confirmed by Flipkart: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X