ரெடியா இருங்க.. 4850mAh பேட்டரி.. 8ஜிபி ரேம்.. மலிவு விலையில் வரும் Moto 5ஜி போன்.. எந்த மாடல்?
மோட்டோரோலா நிறுவனம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் மோட்டோ ஜி34 5ஜி போனை கம்மி விலையில் அறிமுகம் செய்தது. இந்நிலையில் மோட்டோ ஜி34 5ஜி ஸ்மார்ட்போனுக்கு அடுத்து மோட்டோ ஜி35 5ஜி (Moto G35 5G ) போனையும் விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது மோட்டோரோலா நிறுவனம். அதாவது வரும் வாரங்களில் இந்த போன் உலக சந்தை மற்றும் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதேபோல் கீக்பெஞ்ச் (Geekbench) தளத்தில் கூட இந்த மோட்டோ ஜி35 5ஜி போன் காணப்பட்டது. எனவே இந்த போன் கூடிய விரைவில் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த மோட்டோ ஜி35 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.

மோட்டோ ஜி35 5ஜி அம்சங்கள் (Moto G35 5G Specifications): யுனிசாக் டி760 சிப்செட் (UniSoC T760 SoC) வசதியுடன் மோட்டோ ஜி35 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் ஆண்ட்ராய்ட 14 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த போன் வெளிவரும். ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த போன் அறிமுகம் செய்யப்படும். பின்பு 4850எம்ஏஎச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங், எல்சிடி டிஸ்பிளே, 50எம்பி கேமரா உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் குறைந்த விலையில் மோட்டோ ஜி35 5ஜி போன் அறிமுகமாகும். தற்போது இந்த போனின் சில அம்சங்கள் மட்டுமே வெளியாகி உள்ளது. கூடிய விரைவில் இந்த போனின் அனைத்து அம்சங்களும் வெளியாகும்.
மேலும் மோட்டோரோலா வரும் ஆகஸ்ட் 21-ம் தேதி இந்தியாவில் மோட்டோ ஜி45 5ஜி போனை அறிமுகம் செய்ய உள்ளது. மேலும் இந்த போனின் முக்கிய விவரக்குறிப்புகள் மற்றும் விலை குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்தும் சற்று விரிவான தகவலகளைப் பார்க்கலாம்.
மோட்டோ ஜி45 5ஜி அம்சங்கள் (Moto G45 5G specifications): 6.5-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளேவைக் கொண்டு மோட்டோ ஜி45 5ஜி போன் அறிமுகமாகும். இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 900 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வசதி உள்ளது.
குவால்காம் ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 3(Snapdragon 6s Gen 3 SoC) சிப்செட் வசதியுடன் இந்த மோட்டோ ஜி45 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவுக்கு வரும். அதேபோல் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மூலம் இந்த போன் இயங்கும். 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் மோட்டோ ஜி45 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி மேக்ரோ லென்ஸ் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் மோட்டோ ஜி45 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

மோட்டோ ஜி45 5ஜி ஸ்மார்ட்போனில் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொண்ட ஸ்பீக்கர்கள் (Speaker) கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் சைடு பேஸிங் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Facing Fingerprint Sensor) கொண்டுள்ளது இந்த மோட்டோ ஸ்மார்ட்போன். அதேபோல் பிங்க், ப்ளூ, கிரீன் ஆகிய நிறங்களில் இந்த போன் விற்பனைக்கு வரும்.
18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000எம்ஏஎச் பேட்டரி வசதி இந்த மோட்டோ ஜி45 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 5ஜி, 3.5 மிமீ இயர்போன் ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட், புளூடூத் 5.3, வை-பை 802, ஜிபிஎஸ், உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன. குறிப்பாக ரூ.12,000-க்கு கீழ்
மோட்டோ ஜி45 5ஜி அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
photo courtesy:xataka.com


Click it and Unblock the Notifications








