மார்க்கெட்டே மிரள போகுது.. ரூ.11,900 போதும்.. 50MP கேமரா.. 8GB ரேம்.. புதிய மோட்டோ 5ஜி போன்.. எந்த மாடல்?
மோட்டோரோலா நிறுவனம் தொடர்ந்து பட்ஜெட் விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது. குறிப்பாக இந்நிறுவனம் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்த 5ஜி போன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் மீண்டும் ஒரு அசத்தலான 5ஜி போனை அறிமுகம் செய்ய உள்ளது மோட்டோரோலா நிறுவனம்.
அதாவது மோட்டோ ஜி34 5ஜி போனை சமீபத்தில் சீனாவில் அறிமுகம் செய்தது மோட்டோரோலா நிறுவனம். இதே மோட்டோ ஜி34 5ஜி ஸ்மார்ட்போன் தான் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஆன்லைனில் வெளியான தகவலின்படி அடுத்த வாரம் இந்த மோட்டோ ஜி34 5ஜி மாடல் இந்தியாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த போனின் அம்சங்கள் மற்றும் விலைப் பற்றிய தகவல்களை இப்போது பார்க்கலாம்.

மோட்டோ ஜி34 5ஜி அம்சங்கள் (Moto G34 5G specifications): 6.5-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி34 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 600 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக பன்ஞ் ஹோல் டிசைன் (Punch-hole Design) இந்த ஸ்மார்ட்போன் மாடல்.
குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 5ஜி எஸ்ஓசி (Qualcomm Snapdragon 695 5G SoC) சிப்செட் வசதியுடன் இந்த மோட்டோ ஜி34 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவுக்கு வரும். பின்பு ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மூலம் இந்த போன் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட் வழங்கப்படும்.
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் இந்த மோட்டோ ஜி34 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி மேக்ரோ லென்ஸ் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி34 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் தெளிவான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.
இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. அதேபோல் இதில் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொண்ட டூயல் ஸ்பீக்கர்கள் (Dual Speaker) கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் சைடு பேஸிங் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Facing Fingerprint Sensor) கொண்டுள்ளது இந்த மோட்டோ ஸ்மார்ட்போன்.

5000எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டு இந்த மோட்டோ ஜி34 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும். எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்த 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 5ஜி, 3.5 மிமீ இயர்போன் ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட், புளூடூத் 5.3, வை-பை 802, ஜிபிஎஸ், உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன.
ஸ்டார் பிளாக் (Star Black) மற்றும் சீ ப்ளூ (Sea Blue) ஆகிய 2 கலர்களில் இந்த போன் விற்பனைக்கு வரும். சீனாவில் மோட்டோ ஜி34 5ஜி மாடல் CNY 999(இந்திய மதிப்பில் ரூ.11,900) விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவிலும் மோட்டோ ஜி34 5ஜி மாடல் அதே ரூ.11,900 விலையில் தான் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








