எக்கச்சக்கமா குவியுது ஆர்டர்.. ரூ.9,999 போதும்.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. புது மோட்டோ 5ஜி போன்..
மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய மோட்டோ ஜி34 5ஜி ஸ்மார்ட்போனை இன்று விற்பனைக்கு கொண்டு வருகிறது. அதாவது இன்று மதியம் 12 மணி அளவில் பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் மோட்டோ ஜி34 5ஜி போனை வாங்க முடியும். மேலும் இந்த போனின் விலை, அம்சங்கள், ஆஃபர் போன்ற அனைத்து தகவல்களையும் இந்த பதிவில் பார்க்கலாம்.
மோட்டோ ஜி34 5ஜி அம்சங்கள் (Moto G34 5G Specifications): சக்திவாய்ந்த ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 695 5ஜி எஸ்ஓசி(Octa-core Snapdragon 695 5G SoC) சிப்செட் வசதியுடன் இந்த மோட்டோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆண்ட்ராய்டு 14 (Android 14 ) இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த போன்.

ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கேமிங் பிரியர்கள் விரும்பும் அட்ரினோ 619 ஜிபியு(Adreno 619 GPU)கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி34 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த போனை நம்பி வாங்கலாம்.
6.5 இன்ச் எச்டிபிளஸ் (HD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே வசதியுடன் இந்த மோட்டோ ஜி34 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 1600 x 720 பிக்சல்ஸ், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 269 பிபிஐ சப்போர்ட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன. குறிப்பாக இந்த டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி மேக்ரோ (Macro) கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பு கொண்டுள்ளது மோட்டோ ஜி34 5ஜி போன். இந்த ரியர் கேமராவில் குவாட் பிக்சல் டெக்னாலஜி (Quad Pixel Technology) பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் புல்எச்டி (FHD) வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கூட உள்ளது.
இதுதவிர செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன். அல்ட்ரா-ரெஸ் (Ultra-Res), டூயல் கேப்ச்சர் (Dual Capture), நைட் விஷன் (Night Vision), மேக்ரோ விஷன் (Macro Vision), போர்ட்ராய்டு (Portrait), ப்ரோ மோட் (Pro Mode), ஆட்டோ எச்டிஆர் (Auto HDR), ப்ரோ மோட், பேஸ் ரீடச் (Face Retouch), ஆக்டிவ் போட்டோஸ் (Active Photos) போன்ற கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.
குறிப்பாக 5000எம்ஏஎச் பேட்டரி உடன் இந்த மோட்டோ ஜி34 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பின்பு இந்த பேட்டரி சார்ஜ் செய்ய 20W டர்போபவர் (TurboPower) ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) சப்போர்ட் கொண்ட ஸ்ட்ரீயோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி34 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். பின்பு IP52 தர வாட்டர் ரெபெல்லெண்ட் சப்போர்ட் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Facing Fingerprint Sensor)வசதி இதில் உள்ளது. மேலும் 5ஜி, டூயல் 4ஜி (Dual 4G), ப்ளூடூத் 5.1 (Bluetooth 5.1), வை-பை 802 (Wi-Fi 802), ஜிபிஎஸ் (GPS) போன்ற கனெக்டிவிட்டி போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் மோட்டோ ஜி34 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
சார்கோல் பிளாக் (Charcoal Black), ஐஸ் ப்ளூ (Ice Blue), ஓசன் கீரின் (Ocean Green) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும். மேலும் இந்த போனின் விலை மற்றும் ஆஃபர்களை இப்போது பார்போம்.
4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட மோட்டோ ஜி34 5ஜி போனின் விலை ரூ.10,999-ஆக உள்ளது. அதேபோல் இதன் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்டின் விலை ரூ.11,999-ஆக உள்ளது. எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகையைப் பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் கிடைக்கும். எனவே ரூ.9,999 இருந்தால் போதும் இந்த மோட்டோ ஸ்மார்ட்போனை வாங்கிவிட முடியும்.


Click it and Unblock the Notifications








