Motorola-க்கு பெரிய மனசு.. மலிவு விலை போனுக்கு ஆண்ட்ராய்டு 15 அப்டேட்.. எந்த மாடல்?
மோட்டோரோலா நிறுவனம் இந்தியாவில் மோட்டோ ஜி34 5ஜி (Moto G34 5G) போன்களுக்கு ஆண்ட்ராய்டு 15 அப்டேட் வழங்கத் தொடங்கியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் ஆண்ட்ராய்டு 14 ஒஎஸ் உடன் இந்த மோட்டோ அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு 15 அப்டேட் கிடைக்கத் தொடங்கியுள்ளது. Reddit மற்றும் X தளங்களில் மோட்டோ ஜி34 5ஜி அப்டேட் பெறும் ஸ்கிரீன்ஷாட்கள் வெளியாகி உள்ளன.
அதுவும் பயனர்களால் பகிரப்பட்ட ஸ்கிரீன்ஷாட்களில் உள்ள தவலின்படி, இந்த அப்டேட் V1UG35H.75-14 பதிப்பு எண்ணுடன் இந்திய பயனர்களுக்குக் கிடைக்கிறது. மேலும் இதன் எடை 2.15 ஜிபி என்பதையும் அது வெளிப்படுத்துகின்றன. மேலும் இந்த மோட்டோ போனுக்கு ஆண்ட்ராய்டு 15 அப்டேட் உடன் செக்யூரிட்டி அப்டேட்கள் (Security Updates) கிடைக்கிறது.

குறிப்பாக மோட்டோ ஜி34 5ஜி போனக்கு மென்மையான கிராபிக்ஸ், faster ஆப் பெர்ஃபாமன்ஸ் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை இந்த ஆண்ட்ராய்டு 15 அப்டேட் கொடுக்கும். சுருக்கமாக கூறவேண்டும் என்றால் மோட்டோ ஜி34 5ஜி போனுக்கு இந்த ஆண்ட்ராய்டு 15 அப்டேட் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். இப்போது மோட்டோ ஜி34 5ஜி போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
மோட்டோ ஜி34 5ஜி அம்சங்கள் (Moto G34 5G Specifications): 6.5 இன்ச் எச்டிபிளஸ் எல்சிடி (LCD) டிஸ்பிளே வசதியுடன் இந்த மோட்டோ ஜி34 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 1600 x 720 பிக்சல்ஸ், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 269 பிபிஐ சப்போர்ட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன. குறிப்பாக இந்த டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
சக்திவாய்ந்த ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 695 5ஜி எஸ்ஓசி (Octa-core Snapdragon 695 5G SoC) சிப்செட் வசதியுடன் இந்த மோட்டோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதேபோல் கேமிங் பிரியர்கள் விரும்பும் அட்ரினோ 619 ஜிபியு(Adreno 619 GPU)கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி34 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த போனை நம்பி வாங்கலாம்.
அதேபோல 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி மேக்ரோ (Macro) கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பு கொண்டுள்ளது மோட்டோ ஜி34 5ஜி போன். இந்த ரியர் கேமராவில் குவாட் பிக்சல் டெக்னாலஜி (Quad Pixel Technology) பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் புல்எச்டி (FHD) வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கூட உள்ளது. அதுவும் இந்த போனின் ரியர் கேமரா உதவியுடன் அசத்தலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.
செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன். அல்ட்ரா-ரெஸ் (Ultra-Res), டூயல் கேப்ச்சர் (Dual Capture), நைட் விஷன் (Night Vision), மேக்ரோ விஷன் (Macro Vision), போர்ட்ராய்டு (Portrait), ப்ரோ மோட் (Pro Mode), ஆட்டோ எச்டிஆர் (Auto HDR), ப்ரோ மோட், பேஸ் ரீடச் (Face Retouch), ஆக்டிவ் போட்டோஸ் (Active Photos) போன்ற கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.
குறிப்பாக 5000mAh பேட்டரி உடன் இந்த மோட்டோ ஜி34 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பின்பு இந்த பேட்டரி சார்ஜ் செய்ய 20W டர்போபவர் (TurboPower) ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
தனித்துவமான டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) சப்போர்ட் கொண்ட ஸ்ட்ரீயோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி34 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். பின்பு IP52 தர வாட்டர் ரெபெல்லெண்ட் சப்போர்ட் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். பின்பு இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது மோட்டோரோலா நிறுவனம்.
சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Facing Fingerprint Sensor)வசதி இதில் உள்ளது. மேலும் 5ஜி, டூயல் 4ஜி (Dual 4G), ப்ளூடூத் 5.1 (Bluetooth 5.1), வை-பை 802 (Wi-Fi 802), ஜிபிஎஸ் (GPS) போன்ற கனெக்டிவிட்டி போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் மோட்டோ ஜி34 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
சார்கோல் பிளாக் (Charcoal Black), ஐஸ் ப்ளூ (Ice Blue), ஓசன் கீரின் (Ocean Green) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும். மேலும் இந்த போனின் விலை மற்றும் ஆஃபர்களை இப்போது பார்போம்.
தற்போது பிளிப்கார்ட் தளத்தில் 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட மோட்டோ ஜி34 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.10,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இதன் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.11,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் கேஷ் பேக் சலுகையும் உள்ளது. எனவே இந்த போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.
ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம், 5000எம்ஏஎச் பேட்டரி, 50எம்பி கேமரா, 6.5-இன்ச் டிஸ்பிளே, டால்பி அட்மோஸ் ஆடியோ ஆதரவு, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த மோட்டோ ஜி34 5ஜி போன் மலிவு விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம். அதேபோல் மோட்டோரோலா நிறுவனம் விரைவில் பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

அதன்படி ஏப்ரல் 2-ம் தேதி இந்தியாவில் மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் (Motorola Edge 60 Fusion) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது இந்நிறுவனம். மேலும் இந்த போனின் சில முக்கிய விவரக்குறிப்புகள் கூட வெளியாகி உள்ளது.
6.7 இன்ச் குவாட் கர்வ்ட் பிஒஎல்இடி (quad-curved pOLED Display) டிஸ்பிளே, OIS ஆதரவு கொண்ட 50எம்பி சோனி எல்ஒய்டி-700சி (50MP Sony LYT-700C) பிரைமரி கேமரா, 32எம்பி செல்பி கேமரா, மீடியாடெக் டைமன்சிட்டி 7400 சிப்செட் (MediaTek Dimensity 7400 chipset), 5500mAh பேட்டரி, 68W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, IP68 + IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant), இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) உள்ளிட்ட அம்சங்களுடன் இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் போன் வெளிவரும்.


Click it and Unblock the Notifications








