ஆளுக்கு 2 வாங்குவீங்க.. ஆஃபரில் ரூ.9,499 பட்ஜெட்.. 50MP கேமரா.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையை (Flipkart Big Billion Days Sale) முன்னிட்டு வெறும் ரூ.10,000 பட்ஜெட்டுக்குள் 50எம்பி கேமரா, 1டிபி மெமரி சப்போர்ட், 5000mAh பேட்டரி போன்ற அம்சங்களை கொண்ட மோட்டோ ஜி32 (Moto G32) விற்பனைக்கு வந்துள்ளது.
மோட்டோ ஜி32 அம்சங்கள் (Moto G32 Specifications): இந்த மோட்டோ போன் 6.5 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டி பிளஸ் (FHD+)டிஸ்பிளே கொண்டுள்ளது. இதுவொரு மேக்ஸ்விஷன் (MaxVision) எல்சிடி (LCD) டிஸ்பிளே மாடலாகும். இதில் 20:9 அஸ்பெக்ட் ரேசியோ மற்றும் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது.

இந்த மோட்டோ மாடலில் ஆண்ட்ராய்டு 13 (Android 12) மற்றும் மை யுஎக்ஸ் (My UX) ஓஎஸ் சப்போர்ட் உள்ளது. அதோடு ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 680 6என்எம் மொபைல் (Octa Core Snapdragon 680 6nm Mobile) சிப்செட் மற்றும் அட்ரினோ 610 ஜிபியு (Adreno 610 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.
இந்த போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வருகிறது. அதோடு 1 டிபிக்கான மைக்ரோ எஸ்டி கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, ஹைபிரிட் டூயல் சிம் (Hybrid Dual SIM) மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு (microSD Card) சிலாட் வருகிறது. இந்த போனானது, கம்மி பட்ஜெட்டிலும் டிபிரிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) கொண்டிருக்கிறது.
அந்த வகையில், 50 எம்பி மெயின் கேமரா +8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. இந்த மேக்ரோவில் டெப்த் சப்போர்ட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு எல்இடி பிளாஷ் (LED Flash) இடம் பெற்றுள்ளது. அதேபோல 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது.
இந்த மோட்டோ போனில் IP52 தர ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (Splash Resistant) வருகிறது. சைடு மவுண்டெட் ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் (Side-Mounted Fingerprint Scanner) மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் (Audio Jack) வருகிறது. மேலும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் மற்றும் எப்எம் ரோடியோ (FM Radio) கொண்டுள்ளது
இந்த மோட்டோ போனில் 30W டர்போ சார்ஜிங் (Turbo Charging) சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இதற்கு டைப்-சி (Type-C) சார்ஜிங் போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரி உடன் சேர்த்து 184 கிராம் எடை கொண்டிருக்கிறது. இதுவொரு 4ஜி மாடலாகும். ஆகவே, டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5 (Bluetooth 5), ஜிபிஎஸ் (GPS) மற்றும் என்எப்சி (NFC) ஆகிய கனெக்டிவிட்டி அம்சங்கள் வருகின்றன.
இந்த போன் சாடின் சில்வர் (Satin Silver) மற்றும் மினரல் கிரே (Mineral Grey) ஆகிய இரண்டு கலர்களில் விற்பனை செய்யப்பட்டு, வருகிறது. இந்த மோட்டோ போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.12,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. இப்போது, பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் அதிரடி டிஸ்கவுண்ட்டுடன் வெறும் ரூ.9,999க்கு விற்பனைக்கு வந்துள்ளது.
இந்த விலையிலும், ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.500 டிஸ்கவுண்ட்டும், ரூ.9450 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் வழங்கப்படுகிறது. ஆகவே, இந்த போனை வெறும் ரூ.9,499க்கு வாங்கிக் கொள்ள முடியும். மிகவும் மலிவான விலையில், பக்கா கேமரா, பேட்டரி பேக்கப் மற்றும் டிசைன் வேண்டும் என்றால், இந்த மோட்டோ ஜி42 போனை தேர்வு செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








