Moto Review- ரூ.12,999 போதும்., Moto G32 பயன்படுத்த எப்படி இருக்கு?
மோட்டோரோலா நிறுவனம் பல ஜி சீரிஸ் ஸ்மார்ட்போனகளை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி தற்போது பட்ஜெட் விலையில் ஒரு ஜி சீரிஸ் ஸ்மார்ட்போன்களை மோட்டோ அறிமுகம் செய்துள்ளது. அது Moto G32 ஸ்மார்ட்போனாகும்.
இந்த ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ.12,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

மோட்டோ ஜி32 ரிவ்யூ
குறிப்பிடத்தக்க அம்சம்
சிறப்பான பேட்டரி ஆயுள்
சுமூகமான ஆதரவை வழங்கும் UI
இன்னும் மேம்பட்டு இருக்கலாம்
பழைய டிசைனுடனான வடிவமைப்பு
கேமரா செயல்திறன் ஈர்க்கும் வகையில் இல்லை

இந்தியாவில் பட்ஜெட் விலை பிரிவில் ஏணைய ஸ்மார்ட்போன்கள் கிடைக்கிறது. இந்த விலைப் பிரிவில் சமீபத்தில் இணைந்தது Moto G32 ஸ்மார்ட்போன்.
Moto G32 ஸ்மார்ட்போனானது சாதாரண வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது. அதாவது பல்வேறு ஸ்மார்ட்போன்களில் பார்த்த அதே வடிவமைப்பு இதிலும் இருக்கிறது.

Moto G32 வடிவமைப்பு விவரம்
Moto G32 ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு குறிப்பிடத்தக்க வகையில் எதுவும் இல்லை. பொதுவான ஸ்மார்ட்போனின் இருக்கும் வடிவமைப்பையே இதுவும் கொண்டிருக்கிறது.
பொதுவான வடிவமைப்பு மட்டுமே மோசமான வடிவமைப்பு இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த ஸ்மார்ட்போனானது மினரல் க்ரே மற்றும் சாடின் சில்வர் வண்ண விருப்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Moto G32 ஸ்மார்ட்போனானது பிளாஸ்டிக் ஆதரவோடு வளைந்த பின் பேனல் அமைப்பைக் கொண்டுள்ளது.
உயர்தர காட்சி, USB Type-C போர்ட், மைக்ரோஃபோன், 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் மற்றும் கீழ்புற ஸ்பீக்கர் கிரில் பொருத்தப்பட்டுள்ளது.
வலது புறத்தில் வால்யூம் ராக்கர் மற்றும் பவர் பட்டன் மற்றும் இடதுபுறத்தில் சிம் கார்ட் ட்ரே இருக்கிறது.

Moto G32 டிஸ்ப்ளே எப்படி?
Moto G32 டிஸ்ப்ளே குறித்து பார்க்கையில், இது 6.5 இன்ச் FHD+ MaxVision LCD டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கிறது.
90Hz ரெஃப்ரஷிங் ரேட்டை இந்த டிஸ்ப்ளே கொண்டுள்ளது. பாண்டா கிளாஸ் 3 பாதுகாப்பு உள்ளது.
OTT ஸ்ட்ரீமிங் போன்றவைகளுக்கு சுமூகமான காட்சி அனுபவத்தை வழங்குகிறது.
600 நிட்ஸ் உச்ச பிரகாச ஆதரவைக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் நேரடி சூரிய ஒளியில் கூட தெளிவான காட்சியை எவ்வித பிரச்சனையும் இல்லாமல் பெற முடிகிறது.

Moto G32 செயல்திறன்
Moto G32 ஸ்மார்ட்போனில் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 680 SoC உள்ளது.
இந்த ஸ்மார்ட்போனானது 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டிருக்கிறது.
நாடே 5ஜிக்கு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இந்த ஸ்மார்ட்போன் 5ஜி இல்லை என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

Moto G32 கேமரா அம்சங்கள்
Moto G32 கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனானது 50MP பிரைமரி சென்சார், 8MP அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2MP மேக்ரோ லென்ஸ் என டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது.
பஞ்ச் ஹோல் கட்-அவுட் வசதியோடு 16எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
பகலில் எடுக்கப்பட்ட புகைப்படம் சிறந்த ஒளித்திறன் உடன் இருக்கிறது. பொதுவாக இந்த ஸ்மார்ட்போனில் எடுக்கப்படும் புகைப்படங்கள் வண்ண அடிப்படையில் நடுநிலையாக இருக்கிறது.

Moto G32 பேட்டரி ஆயுள்
Moto G32 ஸ்மார்ட்போனானது 5000mAh பேட்டரி ஆதரவைக் கொண்டிருக்கிறது. 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு இதில் உள்ளது.ஸ்மார்ட்போனுடன் சார்ஜர் வழங்கப்படுகிறது.
பேட்டரி ஆயுளை பொறுத்தவரை, கேம்கள், வீடியோ ஸ்ட்ரீமிங் உட்பட அனைத்தையும் கையாளும் போதே 6.5 மணி நேரம் நீடித்தது. இலகுவான முறையில் ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் பட்சத்தில், ஒருமுறை சார்ஜ் செய்தால் நீண்ட நேர ஆயுளை வழங்குகிறது.
இந்த ஸ்மார்ட்போனில் உள்ள 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவின் மூலம் இந்த ஸ்மார்ட்போனை 30 நிமிடங்களில் 50% வரை சார்ஜ் செய்யலாம்.

Moto G32 வாங்கலாமா., வேண்டாமா?
Moto G32 ஸ்மார்ட்போனானது 5000mAh பேட்டரி மற்றும் 33W சார்ஜரைக் கொண்டிருக்கிறது. Android 13 புதுப்பிப்பை இந்த ஸ்மார்ட்போன் பெறும்.
கேமிங் பிரியராக இருக்கும் பட்சத்தில் மோட்டோ ஜி32 ஸ்மார்ட்போனை நீங்கள் தேர்வு செய்ய வேண்டாம். இருப்பினும் லைட் கேமர்களுக்கு இது ஏற்றது.
சிறந்த செயல்திறன், மேம்பட்ட கேமரா, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல அம்சங்கள் இதில் சிறப்பாக உள்ளது.


Click it and Unblock the Notifications