பிளிப்கார்ட் பிச்சிக்குது.. முரட்டு ஆஃபர்.. வெறும் ரூ.10,000 பட்ஜெட்டுக்குள் 4 போன்கள்.. எந்தெந்த மாடல்?
பிளிப்கார்ட் (Flipkart) பிக் பில்லியன் டேஸ் சேல் விற்பனை, வரும் அக்டோபர் 8ஆம் தேதி முதல் அக்டோபர் 15ஆம் தேதி வரையில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இந்த விற்பனைக்கு முன்பே நம்ப முடியாத டிஸ்கவுண்ட்டில் ரூ.10,000க்கும் கீழ் 4 போன்கள் விற்பனைக்கு வந்துள்ளன.
மோட்டோ ஜி32 (Moto G32), சாம்சங் கேலக்ஸி எப்13 (Samsung Galaxy F13), இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 7 (Infinix Smart 7) மற்றும் ஓப்போ ஏ17கே (Oppo A17k) ஆகிய போன்களுக்கு பிரம்மாண்ட டிஸ்கவுண்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போன்களின் விலை, ஆஃபர் மற்றும் அம்சங்கள் குறித்த விவரம் பின்வருமாறு.

மோட்டோ ஜி32 அம்சங்கள், விலை (Moto G32 Specifications, Price): இந்த போன் 6.5 இன்ச் ஃபுல்எச்டி பிளஸ் டிஸ்பிளே கொண்டுள்ளது. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 680 6என்எம் (Octa Core Snapdragon 680 6nm) சிப்செட் மற்றும் அட்ரினோ 610 ஜிபியு (Adreno 610 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.
இந்த போன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்டுள்ளது. 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. 5000 mAh பேட்டரி வருகிறது. இதன் விலை ரூ.11,999ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது ரூ.9,999க்கு கிடைக்கிறது.
சாம்சங் கேலக்ஸி எப்13 அம்சங்கள், விலை (Samsung Galaxy F13 Specifications, Price): இந்த போன் 6.6 இன்ச் ஃபுல்எச்டி பிளஸ் டிஸ்பிளே கொண்டுள்ளது. ஆக்டா-கோர் எக்ஸினோஸ் 850 ( Octa-Core Exynos 850) சிப்செட் மற்றும் மாலி ஜி 52 (Mali-G52) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.
இந்ச போன் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்டுள்ளது. 50 எம்பி மெயின் கேமரா + 5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா வருகிறது. 15W ஃபாஸ்ட் சார்ஜ் கொண்ட 6000mAh பேட்டரி வருகிறது. இந்த போனில் விலை ரூ.11,999ஆக இருந்த நிலையில், இப்போது ரூ. 9,199க்கு கிடைக்கிறது.
இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 7 அம்சங்கள், விலை (Infinix Smart 7 Specifications, Price): இந்த போன் 6.6 இன்ச் எச்டிபிளஸ் டிஸ்பிளே கொண்டுள்ளது. 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்டுள்ளது. ஆக்டா-கோர் யுனிசோக் எஸ்சி9863ஏ1 (Octa-Core Unisoc SC9863A1) சிப்செட் மற்றும் ஐஎம்ஜி8322 ஜிபியு (IMG8322 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.
13 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 10w ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6000mAh பேட்டரி வருகிறது. இந்த போனில் விலை ரூ.7299ஆக இருந்த நிலையில், இப்போது பிளிப்கார்ட்டில் வெறும் ரூ. 6,599க்கு கிடைக்கிறது.
ஓப்போ ஏ17கே அம்சங்கள், விலை (Oppo A17k Specifications, Price): இந்த போன் 6.56 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே கொண்டுள்ளது. ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 12என்எம் (Octa Core MediaTek Helio G35 12nm) சிப்செட் மற்றும் ஐஎம்ஜி பவர்விஆர் ஜிஇ8320 ஜிபியு (IMG PowerVR GE8320 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.
8 எம்பி மெயின் கேமரா + 5 எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது. இந்த போனில் 5000mAh பேட்டரி வருகிறது. நேவி ப்ளூ, கோல்டு ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இதன் விலை ரூ.10,499ஆக இருந்த நிலையில், இப்போது, ரூ.8,999க்கு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications