பட்ஜெட் பிரைஸில் புது Moto G32 இன்று முதல் விற்பனை.. விலை மற்றும் சலுகை விபரம்.!

|

கடந்த வாரம், மோட்டோரோலா நிறுவனம் இந்தியச் சந்தையில் மோட்டோ ஜி32 (Moto G32) என்ற புதிய பட்ஜெட் ரேஞ்ச் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, இந்த புதிய பட்ஜெட் பிரைஸ் ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை, இன்று முதல் துவங்குகிறது. இந்த புதிய Moto G32 சாதனம் என்ன விலையில், என்னென்ன சலுகைகளுடன் வாங்குவதற்குக் கிடைக்கும் என்பது போன்ற தகவலைத் தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். எனவே, விவரங்களை முழுமையாகப் படியுங்கள்.

Moto G32 விலை மற்றும் சலுகைகள்

Moto G32 விலை மற்றும் சலுகைகள்

மோட்டோரோலா நிறுவனம் இந்தியாவில் உள்ள பெருமளவு பட்ஜெட் வாடிக்கையாளர்களை மையமாக வைத்து இந்த புதிய Moto G32 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த Moto G32 ஆனது 4GB ரேம் + 64GB ஸ்டோரேஜ் கொண்ட ஒற்றை வேரியண்ட் மாடலாக வாங்குவதற்குக் கிடைக்கிறது. இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் சாதனம் ரூ.12,999 என்ற விலையில் வாங்கக் கிடைக்கிறது. இது இன்று மதியம் 12:00 மணி முதல் பிளிப்கார்ட் வழியாகப் பிரத்தியேகமாக விற்பனைக்கு வந்துள்ளது.

Moto G32 வாங்கும் போது கிடைக்கும் சலுகைகள் என்ன?

Moto G32 வாங்கும் போது கிடைக்கும் சலுகைகள் என்ன?

இந்த ஸ்மார்ட்போனின் அறிமுக விற்பனையை முன்னிட்டு நிறுவனம் இப்போது சில சலுகைகளையும் அறிவித்துள்ளது. இதன் படி, HDFC வங்கி கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி Moto G32 வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1,250 வரை தள்ளுபடி கிடைக்கிறது. இத்துடன், Google Nest Hub மற்றும் Google Nest Mini ஆகியவற்றை Moto G32 உடன் வாங்குபவர்களுக்கு அதன் விலை முறையே ரூ.4,999 மற்றும் ரூ.1,999 என்ற கட்டணத்தில் வாங்கக் கிடைக்கிறது.

Moto G32 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம்

Moto G32 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம்

மோட்டோ ஜி32 ஸ்மார்ட்போன் 2400 x 1080 பிக்சல்கள் கொண்ட 90Hz ரெப்பிரஷ் ரேட் உடைய 6.5' இன்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது சென்டர்டு பஞ்ச் ஹோல் LCD டிஸ்பிளேவாக வழங்கப்பட்டுள்ளது. இந்த பேனல் 405 PPI மற்றும் 20:9 விகிதத்தைக் கொண்டுள்ளது. Motorola நிறுவனத்தின் இந்த புதிய Moto G32 ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலை பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் இது பிளாஸ்டிக் பாடியுடன் வருகிறது என்பது கவனிக்கத்தக்கது.

30W பாஸ்ட் சார்ஜிங் உடன் 5,000mAh பேட்டரி

30W பாஸ்ட் சார்ஜிங் உடன் 5,000mAh பேட்டரி

இந்த புதிய ஸ்மார்ட்போன் டிவைஸ் 4GB LPDDR4x ரேம் உடன் வருகிறது. இது சக்தி வாய்ந்த Qualcomm Snapdragon 680 சிப்செட்டின் கீழ் இயங்குகிறது. இது ஆண்ட்ராய்டு 12 இல் கிடைக்கிறது. நிறுவனம் இதை, ஆண்ட்ராய்டு 13 அப்டேட் மற்றும் மூன்று வருடப் பாதுகாப்பு அப்டேட்களை கிடைக்கும் என்று உறுதியளித்துள்ளது கவனிக்கத்தக்கது. இது 5,000mAh பேட்டரி யூனிட்டைக் கொண்டுள்ளது. இது 30W பாஸ்ட் சார்ஜிங்கை வழங்குகிறது.

பட்ஜெட் போனில் இப்படி ஒரு கேமரா அம்சமா?

பட்ஜெட் போனில் இப்படி ஒரு கேமரா அம்சமா?

இது பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் என்றாலும் கூட, இதன் கேமரா அம்சங்கள் மிகவும் சிறப்பாக அமைத்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 50 மெகாபிக்சல் பிரைமரி சென்சார், 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் சென்சார் (டெப்த் சென்சாராகவும் இரட்டிப்பாகிறது) மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் ஆகியவற்றை உள்ளடக்கிய டிரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வருகிறது. செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக இதன் முன்பக்கத்தில், 16 மெகாபிக்சல் செல்ஃபி ஸ்னாப்பர் வழங்கப்பட்டுள்ளது.

மோட்டோ ஜி32 போனின் விற்பனை இப்போது லைவில் உள்ளது

மோட்டோ ஜி32 போனின் விற்பனை இப்போது லைவில் உள்ளது

இந்த ஸ்மார்ட்போன் டூயல் சிம், 4ஜி, டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத் 5.2, ஜிஎன்எஸ்எஸ் மற்றும் யூஎஸ்பி டைப்-சி ஆகியவை இணைப்பு விருப்பங்களாக உள்ளன. கூடுதலாக, இது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார், பிரத்தியேக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட், டால்பி அட்மோஸை ஆதரிக்கும் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் 3.5 மிமீ ஹெட்போன் ஜாக் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை இப்போது லைவில் உள்ளதால் உடனே முந்துங்கள்.

Best Mobiles in India

English summary
Moto G32 goes on sale today in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X