மோட்டோ ஜி31 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!
இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மோட்டோ ஜி31 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போன் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனம். இப்போது மோட்டோ ஜி31 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விபரங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட மோட்டோ ஜி31 ஸ்மார்ட்போனின் விலை ரூ.12,999-ஆக உள்ளது. பின்பு இதன்
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்டின் விலை ரூ.14,999-ஆக உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன்வரும் டிசம்பர் 6-ம் தேதி பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டோ ஜி31 ஸ்மார்ட்போன் ஆனது 6.4-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது மோட்டோ ஜி31 ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.

இந்த புதிய ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட் உடன் Arm Mali-G52 MC2 GPUஆதரவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய மோட்டோ ஜி31 ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

மோட்டோ ஜி31 ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி மெயின் சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல். இதுதவிர டூயல் கேப்சர், ஸ்பாட் கலர், நைட் விஷன், போர்ட்ரெய்ட்,
லைவ் ஃபில்டர், ஏஆர் ஸ்டிக்கர்கள், ப்ரோ மோட் என பல்வேறு கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்.

மோட்டோ ஜி31 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 20 வாட் டர்போபவர் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை ஸ்கேனர், ஃபேஸ் அன்லாக என பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி31 ஸ்மார்ட்போன்.

4ஜி எல்டிஇ, எஃப்எம் ரேடியோ, 3.5எம்எம் ஆடியோ ஜாக், புளூடூத் வி5, டூயல் பேண்ட் வைஃபை 802.11 ஏசி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஜிபிஎஸ் என பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். மேலும் ப்ராக்ஸிமிட்டி சென்சார்,SAR சென்சார், கைரோஸ்கோப் சென்சார் எனப் பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி31 ஸ்மார்ட்போன்

மோட்டோ ஜி51 5ஜி
மேலும் இந்நிறுவனம் இதற்குமுன்பு அறிமுகம் செய்த மோட்டோ ஜி51 ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம். மோட்டோ ஜி51 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.8-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு 720 x 1600 பிக்சல் தீர்மானம்,120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அசத்தலான மோட்டோ ஜி51.

மோட்டோ ஜி51 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பிசெல்பீ கேமராஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். மோட்டோ ஜி51 5ஜி ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 எஸ்ஒசி சிப்செட்
வசதி உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

இந்த புதிய மோட்டோ ஜி51 5ஜி ஸ்மார்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒருஸ்லாட்
கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மோட்டோ ஜி51 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய
கவலை இருக்காது. பின்பு பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications