இதுமட்டும் இருக்காது, ஆனா இது உறுதி- மோட்டோ ஜி31 விரைவில் அறிமுகம்!

|

ஸ்மார்ட்போன் வைஃபை அலைன்ஸ் மற்றும் என்பிடிசி உள்ளிட்ட சில இணையதளங்கள் மூலம் சான்றளிக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் மோட்டோ ஜி 31 விரைவில் வெளியிடப்பட இருப்பது தெரிவிக்கப்படுகிறது.

மோட்டோ ஜி 30 சாதனம்

மோட்டோ ஜி 30 சாதனம்

மோட்டோரோலா இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் மோட்டோ ஜி 30 சாதனத்தை அறிமுகம் செய்தது. அதன்படி வரவிருக்கும் மோட்டோ ஜி 30 ஸ்மார்ட்போனுக்கான பணிகளில் நிறுவனம் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. மாதிரி எண் உடன் XT2173 உடன் காணப்படுகிறது. இது வைஃபை அலையன்ஸ் சான்றிதழை பெற்றுள்ளது. வைபை சான்றிதழின் படி, ஸ்மார்ட்போன் 802.11 ஏசி தரத்திற்கான இரட்டை வைஃபை பேண்ட் திறன்களையும் அதற்கான ஆதரவையும் கொண்டுள்ளது.

வைஃபை அலையன்ஸ் சான்றிதழ்

வைஃபை அலையன்ஸ் சான்றிதழ்

வைஃபை அலையன்ஸ் சான்றிதழை தவிர, இந்த சாதனம் என்பிடிசி மற்றும் இஇசி மூலம் சான்றிதழ் பெற்றிருக்கிறது. இது 4ஜி வசதியை மட்டுமே கொண்டிருக்கும் என உறுதிப்படுத்துள்ளது. மோட்டோ ஜி30 சாதனமானது 6.5 இன்ச் எச்டி ப்ளஸ் ஐபிஎஸ் டிஸ்ப்ளே 1600 x 720 பிக்சல்கள் தீர்மானத்தோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 662 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்புடன் வரும் என கூறப்படுகிறது. மெமரி விரிவாக்க வசதிக்கு 1 டிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யக்கூடிய மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் இருக்கிறது.

பின்புறத்தில் குவாட் கேமரா அமைப்பு

பின்புறத்தில் குவாட் கேமரா அமைப்பு

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் குவாட் கேமரா அமைப்போடு வருகிறது. இது 64 மெகாபிக்சல் பிரைமரி கேமரா உடன் வருகிறது. 8 மெகாபிக்சல்ல அல்ட்ரா வைட் ஆங்கிள் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் ஆழ சென்சார் மற்றும் 2 எம்பி மேக்ரோ சென்சார் உடன் வருகிறது. இதன் முன்புறத்தில் 13 மெகாபிக்சல் செல்பி கேமரா உடன் வருகிறது. மோட்டோ ஜி 30 ஸ்மார்ட்போனானது 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 20 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வருகிறது.

இணைப்பு விருப்பங்கள்

இணைப்பு விருப்பங்கள்

இதன் இணைப்பு விருப்பங்கள் குறித்து பார்க்கையில், 4ஜி , வைஃபை, ப்ளூடூத் 5.0, என்எப்சி, ஜிபிஎஸ் மற்றும் யூஎஸ்பி டைப் சி போர்ட் ஆகிய ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஐபி 52 மதிப்பீட்டு ஆதரவோடு வருகிறது. மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ இந்தியா அறிமுகம் டீஸ் செய்யப்பட்டது.

எட்ஜ் 20 ப்ரோ அறிமுகம்

எட்ஜ் 20 ப்ரோ அறிமுகம்

இந்தியாவில் எட்ஜ் 20 ப்ரோ அறிமுகம் செய்யப்பட்ட சரியான தேதி வெளியிடப்படவில்லை. இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட்டின் வரவிருக்கும் பிக் பில்லியன் தின விற்பனை 2021-ல் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ சிறப்பம்சங்கள்

மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ சிறப்பம்சங்கள்

மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் டிஸ்ப்ளே வசதியோடு 10-பிடி ஓஎல்இடி டிஸ்ப்ளேவை கொண்டிருக்கிறது. டிசிஐ-பி3 வண்ண வரம்பு, எச்டிஆர் 10+, அமேசான் எச்டிஆர் மற்றும் 144 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு விகித ஆதரவை பெறுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 870 எஸ்ஓசி வசதியோடு 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது.

முன்புறத்தில் 32 மெகாபிக்சல் செல்பி கேமரா

முன்புறத்தில் 32 மெகாபிக்சல் செல்பி கேமரா

இதில் பின்புற கேமரா ஆதரவாக மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 108 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 5 எக்ஸ் ஆப்டிக்ஸ் ஜூம் உடன் 8 எம்பி பெரிஸ்கோப் கேமரா மற்றும் 16 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் சென்சார் வசதியோடு வருகிறது. முன்புறத்தில் 32 மெகாபிக்சல் செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

4500 எம்ஏஎச் பேட்டரி

4500 எம்ஏஎச் பேட்டரி

இந்த ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி வசதியோடு 30 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை கொண்டிருக்கிறது. ஸ்மார்ட்போன் யுஎக்ஸ் உடன் ஆண்ட்ராய்டு 11 மூலம் இயங்குகிறது. ஃபிஷிங் தாக்குதல்களை தடுக்க மொபைல் பாதுகாப்பிற்கு திங்க்ஷீல்ட் வசதியும் ஸ்மார்ட்போனில் இருக்கிறது.

File Image

Most Read Articles
Best Mobiles in India

English summary
Moto G31 Might Launching Soon: Certified By Wifi Alliance and NBTC

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X