மார்க்கெட்டே அதிரும் பாருங்க.. 6000mAh பேட்டரி, 50MP கேமரா.. பட்ஜெட் விலை மோட்டோ போன். எந்த மாடல்?
மோட்டோரோலா நிறுவனம் தனது மோட்டோ ஜி24 பவர் ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த போன் இந்திய சந்தை மற்றும் உலக சந்தையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டூயல் ரியர் கேமரா, பெரிய டிஸ்பிளே மற்றும் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்த மோட்டோ ஜ24 பவர் ஸ்மார்ட்போன் வெளிவரும்.
மோட்டோ ஜி24 பவர் அம்சங்கள் (Moto G24 Power specifications): டார்க் ப்ளூ மற்றும் சில்வர் நிறங்களில் இந்த அசத்தலான மோட்டோ ஜி24 பவர் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பாட்டம் ஃபயரிங் ஸ்பீக்கர்கள், சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர்(Side-mounted Fingerprint Scanner) உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த போனில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

6.5-இன்ச் ஐபிஎஸ் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் இந்த மோட்டோ ஜி24 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் 1612 x 720 பிக்சல்ஸ், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 600 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
மீடியாடெக் ஹீலியோ ஜி85 எஸ்ஒசி (MediaTek Helio G85 SoC) சிப்செட் வசதி கொண்டுள்ளது இந்த அசத்தலான மோட்டோ ஜி24 பவர் ஸ்மார்ட்போன். குறிப்பாக கேமிங் வசதிகளுக்குத் தகுந்தபடி மாலி ஜி52 எம்சி2 ஜிபியு(Mali G52 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு இதில் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்.
அதேபோல் My UX சார்ந்த ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளத்தைக் கொண்டு இந்த மோட்டோ ஜி24 பவர் ஸ்மார்ட்போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கும்.
8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி வசதியுடன் இந்த மோட்டோ ஜி24 பவர் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது மோட்டோரோலா நிறுவனம்.
50எம்பி மெயின் கேமரா + 2எம்பி மேக்ரோ சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி24 பவர் ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

மோட்டோ ஜி24 பவர் ஸ்மார்ட்போனில் 6000எம்ஏஎச் பேட்டரி (6000mAh battery) வசதி உள்ளது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 30 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (30W fast charging)ஆதரவும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இது நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும்.
புளூடூத் 5.0 ( Bluetooth 5.0), வைஃபை 5 (Wi-Fi 5), ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட்உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த மோட்டோ ஸ்மார்ட்போனில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு மோட்டோ ஜி24 பவர் ஆனது ரூ.12,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று தகவல் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications








