மார்கெட் அதிருது.. பட்ஜெட்ல 16GB ரேம்.. 6000mAh பேட்டரி.. 30W சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?
இந்திய மார்கெட் அதிரும் பட்ஜெட்டில் 16ஜிபி ரேம், 6000mAh பேட்டரி, 30W ஃபாஸ்ட் சார்ஜிங், 50எம்பி கேமரா, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் போன்ற பட்டையை கிளப்பும் அம்சங்களுடன் மோட்டோ ஜி24 பவர் (Moto G24 Power) போன் வெளியாகிறது. இதுகுறித்த விவரம் இதோ.
மோட்டோ ஜி24 பவர் அம்சங்கள் (Moto G24 Power Specifications): இந்த மோட்டோ போனானது, மோட்டோ ஜி24 என்னும் பெயரில் சில நாடுகளில் வெளியாகிவிட்டது. இப்போது, கூடுதல் அம்சங்களோடு மோட்டோ ஜி24 பவர் என்னும் பெயரில் இந்தியாவில் வெளியாக இருக்கிறது. இந்த கூடுதல் அம்சங்களை முதலில் பார்ப்போம்.

இந்த மோட்டோ ஜி24 பவர் போனில் 30W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6000mAh பேட்டரி வருகிறது. ஆனால், மோட்டோ ஜி24 போனில் 5000mAh பேட்டரி மட்டுமே கொடுக்கப்பட்டது. அதேபோல பவர் போனில் 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. ஆனால், முன்பே வெளியான போனில் 8 எம்பி கேமரா மட்டுமே இருக்கிறது.
இதுதவிர மற்ற அம்சங்கள் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. அவற்றை இப்போது தெரிந்து கொள்வோம். இந்த மோட்டோ ஜி24 பவர் மாடலில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 12என்எம் (Octa Core MediaTek Helio G85 12nm) சிப்செட் வருகிறது.
6.6 இன்ச் எச்டிபிளஸ் (HD+) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 537 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது.

இதுவொரு குவாட் பிக்சல் டெக்னாலஜி (Quad Pixel Technology) கொண்ட கேமராவாகும். அதோடு ஆட்டோ நைட் விஷன் (Auto Night Vision) மற்றும் மேக்ரோ விஷன் (Macro Vision) சப்போர்ட் கொண்டிருக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்களில் விற்பனைக்கு வர இருக்கிறது.
அதோடு 4 ஜிபி வேரியண்ட்டில் 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் மற்றும் 8 ஜிபி வேரியண்ட்டின் 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் கொண்டிருக்கிறது. பேஸ் அன்லாக் (Face Unlock) மற்றும் சைடு ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side Fingerprint Scanner) வருகிறது. டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொண்டிருக்கிறது.
அதோடு ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் (Audio Jack) வருகிறது. IP52 டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust/Splash Resistant) கொண்டுள்ளது. டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0), ஜிபிஎஸ் (GPS) மற்றும் யுஎஸ்பி டைப்-சி (USB Type-C) சப்போர்ட் கொண்டிருக்கிறது.
இந்த மோட்டோ ஜி24 பவர் போன் அல்ட்ரா பிரீமியம் டிசைனில் மேட் சார்கோல் (Matte Charcoal), ஐஸ் கிரீன் (Ice Green), புளுபெர்ரி (Blueberry) மற்றும் பிங்க் லாவெண்டர் (Pink Lavender) ஆகிய கலர்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. வரும் ஜனவரி 30ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது.
பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பிய மார்கெட்டுகளில் இந்த போனில் ஆரம்ப விலை ரூ.11,680 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்திய வேரியண்ட்டில் கூடுதல் பேட்டரி, கேமரா அம்சங்கள் இருப்பதால், ரூ.12,000 முதல் 14,000 பட்ஜெட்டில் விலை நிர்ணயம் இருக்க வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








