Home
Mobile

அட்டகாசம் பண்ணும் மோட்டோரோலா.. 6000mAh பேட்டரி.. 33W சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?

இந்தியாவில் மோட்டோரோலா நிறுவனம் தனது மோட்டோ ஜி24 பவர் ஸ்மார்ட்போனை வரும் ஜனவரி 30-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. இந்நிலையில் மோட்டோ ஜி24 பவர் போன் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு பிளிப்கார்ட் தளத்தில் அனைத்து முக்கிய விவரங்களும் வெளியாகி உள்ளது.

அதாவது பிளிப்கார்ட் தளத்தில் மோட்டோ ஜி24 பவர் போனின் விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த போன் மலிவு விலையில் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. இப்போது மோட்டோ ஜி24 பவர் ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகளை சற்று விரிவாகப் பார்ப்போம்.

அட்டகாசம் பண்ணும் மோட்டோரோலா.. 33W சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?

மோட்டோ ஜி24 பவர் விவரக்குறிப்புகள் (Moto G24 Power specifications): 6.5-இன்ச் ஐபிஎஸ் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் இந்த மோட்டோ ஜி24 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். பின்பு 1612 x 720 பிக்சல்ஸ், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் மற்றும் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

மீடியாடெக் ஹீலியோ ஜி85 எஸ்ஒசி (MediaTek Helio G85 SoC) சிப்செட் வசதி கொண்டுள்ளது இந்த அசத்தலான மோட்டோ ஜி24 பவர் ஸ்மார்ட்போன். மேலும் கேமிங் வசதிகளுக்குத் தகுந்தபடி மாலி ஜி52 எம்சி2 ஜிபியு (Mali G52 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு இதில் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்.

4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த மோட்டோ ஜி24 பவர் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

My UX சார்ந்த ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளத்தைக் கொண்டு இந்த மோட்டோ ஜி24 பவர் ஸ்மார்ட்போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஐஸ் ப்ளூ (Ice Blue) மற்றும் கிளாசியர் ப்ளூ (Glacier Blue) நிறங்களில் இந்த அசத்தலான மோட்டோ ஜி24 பவர் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மோட்டோ ஜி24 பவர் ஸ்மார்ட்போன் 50எம்பி மெயின் கேமரா + 2எம்பி மேக்ரோ சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

மோட்டோ ஜி24 பவர் ஸ்மார்ட்போனில் 6000எம்ஏஎச் பேட்டரி(6000mAh battery) வசதி உள்ளது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (30W fast charging) ஆதரவும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இது நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அட்டகாசம் பண்ணும் மோட்டோரோலா.. 33W சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?

ஐபி52 ரேட்டிங் மற்றும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர்(Side-mounted Fingerprint Scanner)வசதியைக் கொண்டுள்ளது இந்த போன். பின்பு 4ஜி வோல்ட்இ, புளூடூத் 5.0 (Bluetooth 5.0), வைஃபை 802.11 ஏசி (Wi-Fi 802.11ac), ஜிபிஎஸ், 3.5எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட்உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த மோட்டோ ஸ்மார்ட்போனில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மோட்டோ ஜி24 பவர் ஆனது ரூ.10,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த புதிய மோட்டோ போனுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Moto G24 Power to launch in India on January 30: Specifications revealed on official website
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X